உள்ளூர் செய்திகள்

சில வரிகள்

பொங்கல் திருநாளை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகங்கள், போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு ஊழியர்களுக்கு, சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஒரு லட்சத்து 8,105 பேருக்கு, 6 கோடி 41 லட்சத்து 18,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.சர்வதேச திருநங்கையர் தினமான ஏப்ரல், 15ல், திருநங்கையருக்கான முன்மாதிரி விருது வழங்கப் பட உள்ளது. ஒரு லட்சம் ரூபாய் காசோலையும், பாராட்டு சான்றிதழும் விருதாக வழங்கப்படும். தகுதி யானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அடுத்த மாதம், 10ம் தேதிக்குள், www.awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். டில்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த, 12 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தேசிய போர் நினைவு சின்னம், இந்திய பிரதமர்கள் அருங்காட்சியகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கும் அழைத்து செல்லப்பட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை