சில வரிகள்...
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில், ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு, 14,000 ரூபாய் மாத உதவித் தொகையுடன், தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக, குரோம்பேட்டை மாநகர போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளியில், ஏப்ரல் 2ம் தேதி காலை, 10:00 மணிக்கு, சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், விருப்பம் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என, மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.