உள்ளூர் செய்திகள்

சில வரி...

எஸ்.சி.,- எஸ்.டி., மற்றும் எஸ்.சி., கிறிஸ்துவ மாணவர்களுக்காக, பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களின் கீழ், 2024-25ம் கல்வியாண்டில், மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. உதவித்தொகை பெற விண்ணப்பிக்க, வரும், 30ம்தேதி கடைசி நாள். எனவே, கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்காத மாணவர்கள், https://umis.tn.gov.in என்ற இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம் என, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் லட்சுமி பிரியா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !