உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடைபாதையில் கொடிக்கம்பம்: நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் அதிரடி

நடைபாதையில் கொடிக்கம்பம்: நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பொது இடங்கள், நடைபாதைகளில் உள்ள சட்டவிரோத கொடிக்கம்பங்களை அகற்றக் கோரிய மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக நிறுவியவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் தெரிவித்துள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஷியாம் குமார் என்பவர் தாக்கல் செய்த மனு:

திருவல்லிக்கேணி, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதி; ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி பகுதிகளில் அரசியல் கட்சிகளும், அரசியல் சாரா இயக்கங்களும், சாலையின் இருபுறங்களிலும் உள்ள நடைபாதைகளில் கொடிக்கம்பங்களை நிறுவி உள்ளன. இதனால், நடைபாதையை, சாலையை பயன்படுத்துவோருக்கு அசவுகரியம் ஏற்படுகிறது.மெரினா கடற்கரை செல்ல டாக்டர் பெசன்ட் சாலையில் இருந்து புறப்பட்டேன். பல இடங்களில் நடைபாதைகளில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதனால், நடைபாதையில் இருந்து இறங்கி, சாலையில் நடக்க வேண்டியதாகி விட்டது. போக்குவரத்து நெரிசல் நிறைந்த அந்த பகுதியில் நடந்து செல்லவே சிரமம் உள்ளது. சில கொடிக்கம்பங்கள் முறையாக நிறுவப்படவும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளன.அனுமதியின்றி கொடிக்கம்பங்களை நிறுவுவது, ஆக்கிரமிப்பாகும் என்பதால், அவைகள் இல்லாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்யும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை. சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்ட விதிகள், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை.சாலை ஓரம், நடைபாதைகளில், கொடிக்கம்பங்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அதிகாரிகளின் கடமை. எனவே, பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற நடவடிக்கை கோரி, அரசுக்கு மனு அனுப்பினேன்; எந்த நடவடிக்கையும் இல்லை. மனுவை பரிசீலித்து, விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். கொடிக்கம்பங்களை நிறுவுவது தொடர்பாக, விதிகளை வகுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி என்.செந்தில்குமார் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்கவும், சட்டவிரோதமாக கொடிக்கம்பங்கள் நிறுவி இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும், நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Dharmavaan
அக் 14, 2024 08:23

எது சட்டம் விரோதமான கொடி கம்பம் எதுவும் கூடாது நடை பாதையில் என்று தீர்ப்பு இருக்க வேண்டும்


GMM
அக் 13, 2024 10:19

நடை பாதை கொடி கம்பம், கடைகள்.. என்பது ஆக்கிரமிப்பு. நடைபாதை கடைகள் கொடி, சிலை வைக்க உரிமம் வழங்கும் முறை சட்ட விரோதம். அவை செல்லாது.நடைபாதைக்கு பொறுப்பு வைக்கும் துறை போலீசார் உதவியுடன் அகற்ற வேண்டும். பணி விதியின் கீழ் நீக்காத அலுவலர் மீது நிர்வாக அதாரிட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைசியில் தான் நீதிமன்றம் தலையிட வேண்டும்.


R.Subramanian
அக் 13, 2024 10:06

ஸ்ரீமுஷ்ணம் பெருமாள் கோவில் செல்லும் வழியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் பெரியார் சிலையை அகற்றி, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.


பாமரன்
அக் 13, 2024 09:01

கோர்ட்டின் இந்த கருத்து விசிலடிச்சான் குஞ்சுகளுக்காக டெம்பரரியா வைக்கப்படும் கொடிகளை பற்றியான்னு தெர்ல... ஆனால் கான்க்ரீட் மேடையுடன் பொது இடங்களில் வைக்கப்படுள்ள அனைத்து கட்சி கம்பங்களையும் கூட அகற்றனும்... பொது இடத்தை ஒரு கட்சிக்கு தாரை வார்க்க அரசு நிர்வாகத்துக்கு என்ன தகுதி இருக்கு...?? அதேபோல் அனைத்து ஆட்டோ ஸ்டேண்ட்களையும் அகற்றனும்... ஆட்டோ ஏறும் இடம்னு ஒரு இடத்தை வேணும்னா ஒதுக்கட்டும்... இதுக்கு போராட பகோடா கம்பெனி முன்வருமா... என் ஆதரவு உண்டு..அட நம்ம தள பகோடாஸ் மாதிரி தார்மீக ஆதரவு தான்... ஃபீல்டுக்கெல்லாம் வரமாட்டோம்...யேட்டேளா...


sankaranarayanan
அக் 13, 2024 08:22

ஒரு கோடி கம்பம் நடுவதற்கு அனுமதி கொடுக்க ரூபாய் பத்தாயிரம் அரசுக்கு கொடுக்க வேண்டும் என்று சட்டம் போடுங்கள் முக்காவாசி கொடிக்கம்பங்கள் காணாமல் போயிடும்


கோபாலகிருஷ்ணன்
அக் 13, 2024 07:33

பாஜக அலுவலக வாயிலில் அதுவும் அவர்கள் நிலத்தில் நட இருந்த கொடியை சில இஸ்லாமியர் எதிர்த்தார்கள் என்பதற்கு கொடியை நட விடாமல் செய்து காவல்துறையினர்.....இன்று நீதிமன்றமே உத்தரவு போட்டுள்ளது திமுக கொடி உட்பட எத்தனை கொடிகளை அகற்றுவார்கள் பார்ப்போம்....


Murugan
அக் 13, 2024 06:56

வாய்பே இல்லை இந்த ஜனநாயகத்தில்


Kasimani Baskaran
அக் 13, 2024 06:13

நடைமுறைப்படுத்தவில்லை / நீதிமன்றத்தால் முடியவில்லை என்றால் தீர்ப்பு செல்லாது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.


J.V. Iyer
அக் 13, 2024 05:21

நல்ல தீர்ப்பு. இதை நடைமுறைப்படுத்த சிப்பாய்களையோ அல்லது எல்லை பாதுகாப்பு அதிகாரிகளையோ பயன்படுத்தவேண்டும். தமிழக ஏவல்துறை அதிகாரிகள் ரொம்ப பிசி.


Murugan
அக் 13, 2024 06:55

வாய்ப்பே இல்லை இந்த ஜனநாயகத்தில்


kumar
அக் 13, 2024 03:50

அதென்ன சட்ட விரோதமான கொடிக்கம்பம் ? நடை பாதையில் இருக்கும் எல்லா கோடி கம்பங்களுமே சட்ட விரோதமானவை. ஆகவே அவை எல்லாமே அகற்றப்படவேண்டும் என்று ஆணையிட வேண்டியது தானே ? அதுவும் இல்லாமல் எதற்கு பரிசீலனை ? நீதிமன்ற அவமதிப்பு என்பதற்காகவே கொடிக்கம்பங்களை அகற்றி அதற்கான செலவுகளை அந்தந்த கட்சிகளிடம் வசூலிக்க வேண்டியது தானே?


பாமரன்
அக் 13, 2024 09:05

நல்ல கருத்து குமார்.. எதற்கு சிங்கிள் ஸ்டார் குத்தறாய்ங்கன்னு தெர்ல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை