உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!

சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனை பேச அனுமதிக்க வேண்டும்'' என அ.தி.மு.க.,வினர் குரல் எழுப்பினர்.சட்டசபையில் விவாத நேரத்தின் போது, பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பேசியதாவது: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குற்றச்செயல்கள் அதிகரிப்பால் அமைதிப் பூங்காவாக உள்ள தமிழகத்தில் சூழல் மாறிக்கொண்டு இருக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8mqmukpo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பல வரலாற்று காரணங்களால் வட மாநிலங்கள் வளர்ச்சியில் பின்தங்கி உள்ளன. தமிழகத்தை நான் வளர்ந்த மாநிலத்தோடு ஒப்பிடுகிறேன். நீங்கள் ஏன் வட மாநிலத்துடன் ஒப்பிடுகிறீர்கள்?கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். தேச விரோத செயல்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும். மதவாத செயல்கள் தமிழகத்தில் நடைபெறுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு வானதி சீனிவாசன் பேசினார். இது குறித்து துரைமுருகன் பேசியதாவது: அனைத்து இடங்களிலும் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களும் இருப்பார்கள். எந்த ஆட்சியாக இருந்தாலும் தவறுகள் இருக்கும். எல்லா இடத்திலும் சட்ட ஒழுங்கு பிரச்னை உள்ளது, என்றார்.

முதல்வர் பதில்

இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது: கோவையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது உண்மைதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதவாத சக்திகள் எங்கு எப்படி உள்ளன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பா.ஜ., ஆட்சியில் பல மாநிலத்தில் என்ன நடக்கிறது?தமிழகத்தில் மதவாத சக்திகள் இருக்கிறது என பொதுவாக கூறக்கூடாது. காஷ்மீரில் நடந்த சம்பவம் தமிழகத்தில் நடைபெறாது. இந்த சம்பவத்தில் மத்திய அரசுக்கு தமிழகம் உறுதுணையாக இருக்கும். தமிழகத்தில் மதவாதம் ஒருபோதும் நுழையாது. தமிழகத்திற்கு மத்திய அரசின் நிதி வராமல் இருப்பது உங்களுக்கு தெரியும். வானதி சீனிவாசன் தலைமையிடம் சொல்லி நிதியை பெற்று தர வேண்டும். பள்ளிக் கல்வித்துறைக்கு வர வேண்டிய நிதி வரவில்லை. நிதி வழங்க கோரி போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

அப்பாவு பதில்

பின்னர் சபாநாயகர் அப்பாவு, '' தமிழகத்தின் மதம் சார்ந்த எந்த பிரச்னையும் கிடையாது. மதம் சார்ந்த எந்த புகார் கொடுத்தாலும், புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அ.தி.மு.க., ஆதரவு குரல்!

'முன்னதாக, சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனை பேச அனுமதிக்க வேண்டும் என அ.தி.மு.க.,வினர் குரல் எழுப்பினர். 'அ.தி.மு.க., பக்கம் இருந்து சத்தம் வருகிறது' என கேள்வி எழுப்பிய சபாநாயகருக்கு, '' அமைச்சர்களுக்காக சபாநாயகர் பேசும்போது, எனக்காக அ.தி.மு.க., வினர் பேசக்கூடாதா?'' என வானதி கேள்வி எழுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Dharmavaan
ஏப் 29, 2025 13:03

....சபையில் இருந்தால் இப்படித்தான் நாடு இருக்கும்


Keshavan.J
ஏப் 28, 2025 22:11

வானதி மேடம் உஷாராக இருங்க. ரெண்டு திராவிட பயலுங்களும் பிராடுங்க.


thehindu
ஏப் 28, 2025 22:01

இந்துமதவாதிகள் ரவுடிகள் . அவர்களுடன் சேர்ந்து அதிமுகக்காரர்களும் ரவுடிகளாக மாறிவிட்டார்கள்


K.Ramakrishnan
ஏப் 28, 2025 21:45

தமிழ்நாட்டில் 1991-– 96 காலகட்டம் ஊழலில் மிக மோசமான காலகட்டமாக இருந்தது என்று ஜெயலலிதா ஆட்சியை ஊழல் ஆட்சி என முத்திரை குத்தி விமர்சித்தவர் மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை. அந்த கட்சியின் எம்.எல்.ஏ.வுக்குத் தான் இப்போது அதிமுக வக்காலத்து வாங்குகிறது. ஜெயலலிதா ஆட்சியை குறை கூறிய கட்சியுடன் அதிமுக கைகோர்ப்பது சரியா?


Dharmavaan
ஏப் 29, 2025 12:43

இப்போது தேவை எதிரிக்கு எதிரி நண்பன்.


Ganapathy Subramanian
ஏப் 28, 2025 17:55

தமிழகத்தில் மதம் சார்ந்த எந்த பிரச்சனையும் கிடையாது - இதை அமைச்சர்கள் சொல்லவில்லை, அடிமை அப்பாவு சொல்கிறார். பொன்முடி மீது கேவலமாக பேசியதாக தற்போது வழக்கு பதிய சொல்லி இருக்கிறதே நீதிமன்றம், அது என்ன பிரச்சனை? மத சம்பந்தமாக பேசிய பிரச்னைதானே? திருப்பரங்குன்றத்தில் உள்ள பிரச்சனை பட்டா சம்பந்தப்பட்ட பிரச்சனையோ?


Yes God
ஏப் 28, 2025 17:51

இந்திய அரசாட்சிக்காக சட்ட மேதை சட்டம் ஏழுதினார்.அச்சட்டங்களை பயன்படுத்த மாநில சபைகளுக்கு தகுதி இருப்பதாக தெரிய வில்லை. அவைகளை மாநில மக்கள் முன்னேற்ற சபை என்று மட்டுமே தகுதி தரவேண்டும். ஐந்தாண்டு தேர்வுகளில் கட்சி சார்பற்றவர்களை சபா நாயகர்களாக தேர்வு செய்தால் எதிர் கட்சிகளின் பேச்சை சபை நடவடிக்கைகளில் தடுக்க மாட்டார்கள்.கட்சி பாரபட்சம் காட்டமாட்டார்கள்.


Yes God
ஏப் 28, 2025 17:38

தடுக்காதீங்க என்ன சொல்கிறேன் என்பதை கவனியுங்கள். இங்கு கருத்து பதிவில் வரிக்காபாடம் எழுதினால் நாடு முனனேறாது.


sankaranarayanan
ஏப் 28, 2025 17:36

ராமாயணத்திலேயே பெண்ணை ஸீதையை கடத்திசென்றதை குறிக்கோள் காட்டிய அமைச்சர் துரைமுருகனுக்கு நன்றி இந்த விஷயங்களில் இவர் சூராதி சூரர் வீராதி வீரர் இது போன்று பேச இவரை மிஞ்சிய அமைச்சர் அவையில் கிடையாதாம் முன்பே பெண் முதல்வர் ஒருவரின் சேலையை அவையிலே பிடித்து இழுத்த மாபெரும் வீரர் சூராதி சூரர் இவர் இப்படித்தான் பேசுவார் அப்போதே இவர்க்கு கட்சியில் தங்கப்பதக்கம் கொடுத்தார்களாம்


Yes God
ஏப் 28, 2025 17:23

இந்திய அரசியலுக்கே சட்டத்தை ஆளும் முழு பொறுப்புள்ளதால் மாநில சட்ட சபலகளைசொல்லாமல் மக்கள் முன்னேற்ற சபைகள் என்றே அழைக்கப்படுதல் காலத்தின் கட்டாயம்.


Nagarajan Thamotharan
ஏப் 28, 2025 16:27

பெண்கள் பாதுகாப்பு பற்றிய கேள்வியை பெண்களுக்கு எதிராக இயங்கும் கூட்டத்திடம் கேட்கலாமா..? செய்தி வாசிப்பாளரை தூக்கி கொண்டு போன இராவண சபையில் .... பெண்கள் உரிமையை பேசி இடுப்பு கிள்ளுகிற கூட்டத்தில்........பெண்கள் பாதுகாப்பு பற்றி .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை