உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லஞ்ச, ஊழல் புகார் அளிக்க உதவி மையம் அமைக்கப்படும்

லஞ்ச, ஊழல் புகார் அளிக்க உதவி மையம் அமைக்கப்படும்

சென்னை:மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி சட்டசபையில் நேற்று வெளியிட்ட அறிவிப்புகள்:ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் உள்ள அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில், நவீன சமையற்கூடம், பல்நோக்கு சமுதாய கூடத்தை உணவு கூடமாக மாற்றி அமைத்தல், நீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள், 3 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லுாரியின் கணினி ஆய்வகம், 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்அரசு துறைகளில் கருணை அடிப்படையில் பணி நியமன நடைமுறைகளை ஒழுங்குபடுத்தவும், அந்த நியமனங்கள் நியாயமானதாகவும், வெளிப்படை தன்மையுடன் நடப்பதை உறுதிப்படுத்தவும், இணையதளம் உருவாக்கப்படும்சென்னை அண்ணாநகரில், அகில இந்திய குடிமை பணிகள் தேர்வு பயிற்சி மையம், நவீன வசதிகளுடன் புதிதாக அமைக்கப்படும்ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், இ - ஆபீஸ் திட்டத்தின் வாயிலாக புதிய கணினிகள் வழங்கப்படும்ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளின் விசாரணைக்கு குரல் பதிவு செய்யும் கருவி மிகவும் அவசியமானது என்பதால், 6.32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 46 குரல் பதிவு செய்யும் கருவிகள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகங்களுக்கு வழங்கப்படும்ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பாக, கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக, மக்கள் எளிதாக புகார் அளிப்பதற்காக, முதல்வரின் முகவரி துறையின் கீழ், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு உதவி மையம், 53.7 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை