வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மழை பெய்யவில்லையென்றாலும் படத்தில் காணப்படும் வீடு இடிந்து விழும் நிலையில் தான் காணப்படுகிறது.
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று அதிகாலை பெய்த கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி பலியானார். வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்கிறது. நேற்று முன்தினம் இரவும் விட்டு விட்டு மழை பெய்தது. நேற்று அதிகாலை நேரத்தில் பெய்த கனமழையால், திண்டுக்கல் அணைப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி போஸ், 54, என்பவரது பழமையான ஓட்டு வீட்டின் கூரை இடிந்து விழுந்தது.இதில் காயமடைந்த போஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தாலுகா போலீசாருக்கும், வருவாய்த் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எஸ்.ஐ., கிருஷ்ணவேணி தலைமையில் போலீசார் அங்கு சென்று போஸின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கிழக்கு தாலுகா தாசில்தார் மீனாதேவி, மண்டல துணை வட்டாட்சியர் பிரேம்குமார், வருவாய் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், வி.ஏ.ஓ செல்வக்குமார் ஆகியோர் சேதமான பகுதியை ஆய்வு செய்தனர்.
மழை பெய்யவில்லையென்றாலும் படத்தில் காணப்படும் வீடு இடிந்து விழும் நிலையில் தான் காணப்படுகிறது.