மேலும் செய்திகள்
வாக்காளர் திருத்தம் முறையாக நடக்கவில்லை!
9 hour(s) ago | 15
1 கோடி பேர் கையெழுத்து தமிழக காங்., பெருமிதம்
9 hour(s) ago | 3
துரோகிகள் இருக்கும் வரை ராமதாசுடன் சேர மாட்டேன்: அன்புமணி
9 hour(s) ago | 1
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மஞ்சாலுமூட்டையைச் சேர்ந்தவர் ரகுவரன் நாயர் 59. நுாறு நாள் வேலைத்திட்ட தொழிலாளி. இவரது மனைவி இறந்து விட்டார். இவரது மகன் அப்பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். முதல் கணவர் மூலம் அந்த பெண்ணுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.தாத்தா என்ற முறையில் ரகுவரன் நாயரிடம் அச்சிறுமி விளையாடுவது வழக்கம். இதை பயன்படுத்தி சிறுமியை மடியில் எடுத்து வைத்து கொஞ்சும் அவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது பல நாட்கள் சிறுமி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து அருமனை போலீசில் புகார் செய்யப்பட்டது. பின் விசாரணை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டு போக்சோ சட்டத்தில் ரகுவரன் நாயர் கைது செய்யப்பட்டார்.வேலை வாங்கித்தருவதாக ரூ.8 லட்சம் மோசடி: தம்பதி கைது
ராமநாதபுரம் மாவட்டம் ராமசாமிப்பட்டியைச் சேர்ந்த தோப்படிமுத்துவிடம் 43, நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 8 லட்சம் மோசடி செய்த விருதுநகர் வேல்சாமி நகரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, சசி தம்பதியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.அவதுாறு பேசிய வழக்கறிஞரை தாக்கிய திருநங்கைகள்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அவதுாறு பேசியதாக கூறி வழக்கறிஞர் நாகசர்மாவை 51, திருநங்கைகள் தாக்கினர். இதுகுறித்து இரு தரப்பிலும் எழுந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.பிளஸ் 2 மாணவர் தற்கொலை
அரியலுார் மாவட்டம் கீழப்பழுவூரிலுள்ள தனியார் பள்ளியில் நீட் மற்றும் ஜே.இ.இ., உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகளை அரசு நடத்தி வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள், கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படிக்கின்றனர்.கடத்தல் கும்பல் கைது; 6 உலோக சிலைகள் மீட்பு
மதுரை மாவட்டம் விளாங்குடி செம்பருத்தி நகரில், பிலோமின்ராஜ் என்பவரின் வீட்டில், உலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த வீட்டில் சோதனை நடத்தி, விளாங்குடி விசாலாட்சி வளாகத்தில் உள்ள, விநாயகர் கோவிலில் திருடப்பட்ட பழமையான விநாயகர் சிலையை மீட்டனர். இது தொடர்பான வழக்கில், பிலோமின்ராஜ் உட்பட நான்கு பேரை கைது செய்தனர்கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த அழகுசேனை கிராமம் சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் பெருமாள், 55; இவர் மனைவி லட்சுமி, 47; இவர்களது மகன் விஜயகுமார்; இவருக்கு திருமணமாகி தனியாக வசிக்கிறார். குடும்ப செலவிற்காக பெருமாள் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால், பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. கடந்த சில மாதங்களாக கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி தரும்படி கேட்டு வந்தனர்.இதில், மனமுடைந்த பெருமாள் மற்றும் லட்சுமி ஆகிய இருவரும், நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து, வீட்டின் அருகே மயங்கி கிடந்தனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, கண்ணமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு நேற்றிரவு சென்ற, ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை அதிகாரிகள், அங்கு இரண்டு மணி நேரம் சோதனை நடத்திய பின், அவரை அதிரடியாக கைது செய்தனர்.கப்பலில் கடத்தப்பட்ட போதைப்பொருள் சிக்கியது
ஆந்திராவின் விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக, கப்பலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்படுவதாக சி.பி.ஐ.,க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத்துறை உதவியுடன் சி.பி.ஐ.,யினர் துறைமுகத்தில் சோதனை நடத்தினர். அதில், ஒரு கப்பலில், மூட்டைகளுடன் 25,000 கிலோ கோகைன் போதைப் பொருளை மறைத்து வைத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. போதைப் பொருளை அளவிடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும், இருப்பினும் அவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
9 hour(s) ago | 15
9 hour(s) ago | 3
9 hour(s) ago | 1