உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது: சொல்கிறார் நடிகர் ரஜினி

அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது: சொல்கிறார் நடிகர் ரஜினி

சென்னை: ''அனுபவசாலிகள் இல்லை என்று சொன்னால் எந்த இயக்கமும், எந்த கட்சியும் தேறாது. அவர்கள் தூண்கள் மட்டுமல்ல, சிகரங்களும் கூட,'' என்று சென்னையில் நடந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.சென்னையில் நடந்த, விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: பல மாதங்களுக்கு முன்பு கலைவாணர் அரங்கில் எ.வ.வேலு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் வந்திருந்தனர். எல்லோரும் நண்பர்கள் தான். அப்போது நான் பேசும்போது, நான், ஓல்டு ஸ்டூடண்டை சமாளிப்பது கடினம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3sqd0ych&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதெல்லாம் ரொம்ப கஷ்டம். அவர்கள் வகுப்பறையைவிட்டு செல்லமாட்டார்கள்' என்று கூறியிருந்தேன். அதே சமயம், 'அப்படியிருந்தாலும் ஓல்டு ஸ்டுடன்ட் தான் தூண்கள். அவர்கள் தான் பவுண்டேஷன். அனுபவசாலிகள் இல்லை என்று சொன்னால் எந்த இயக்கமும், எந்த கட்சியும் தேறாது. அவர்கள் தூண்கள் மட்டுமல்ல, சிகரங்களும் கூட, என்றும் சொல்லலாம் என வந்துவிட்டு எல்லாரும் சிரித்ததில் நான் அதை சொல்ல மறந்து விட்டேன்.இப்போது வரும்போது மனதில் மிஸ்டர் ரஜினிகாந்த் அந்த மாதிரி ஏதும் மிஸ்டேக் பண்ணி விடாதே, என நினைத்தேன். சரியாக பேச வேண்டும் என நினைத்தேன்.

புத்தகம் படிக்கணும்

1996ம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக இருந்தார். இரண்டு, மூன்று முறை அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பேசும்போது மஹாராஷ்டிராவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி இருக்கேன். பத்து மாடு இருக்கிறது. அங்கு நிறைய புத்தகங்கள் வாங்கி வைத்திருக்கிறேன். புத்தகங்களை படித்து விட்டு அங்கே இருக்க வேண்டும் என்பது ஆசை என்றார்.அரசியலை, விட அவர் சொன்ன அந்த விஷயம் மண்டைக்குள் ஏறிடுச்சு. 1996ல் இருந்து நல்ல புத்தகங்கள் கிடைத்தால், ஓய்வுக்கு பிறகு, அந்த மாதிரி ஒரு இடத்தில் இருந்து நல்லா படிக்க வேண்டும் என்பது என் ஆசை. அதனால், புத்தகங்களை படிக்கலாம் என்று எடுத்து வைத்திருக்கிறேன்.

வணங்குகிறேன்!

கலை எந்த வடிவில் இருந்தாலும் சரி, அதை ரசிப்பதில் தமிழ் மக்கள் மன்னர்கள். ஜாதி, மதம், பேதம், மொழி எதையும் பார்க்க மாட்டார்கள். தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்; HATS OFF..உங்க காலில் விழுந்து வணங்குகிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
ஜூலை 12, 2025 14:52

NTR பெரிய அனுபவம் ஏதும் இல்லாமலே கட்சி துவக்கி உடனே முதல்வரானார்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 12, 2025 07:45

இளைஞர்களை கெடுத்தது சினிமா என்னும் மாய உலகம். இளைஞர்களின் மனதை கெடுத்து பணம் சம்பாதித்து பின்னர் தத்துவம் பேசுபவர்கள் தான் சினிமா ஹீரோக்கள்.


mohana sundaram
ஜூலை 12, 2025 07:21

இவர் ஒரு பெரிய அனுபவசாலி கூற வந்து விட்டார். இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை என்பது போல உமக்கு ஏன் அக்கறை. ஏதோ பெரிய கருத்து கண்ணதாசன் போல் ஒவ்வொரு முறையும் கருத்து கூற வந்து விட்டீர்கள்.


Anantharaman Srinivasan
ஜூலை 12, 2025 00:33

கிழவனான பின்னும் நடித்து பிழைக்கத்தெரிந்த இளைஞன்.


msk
ஜூலை 12, 2025 06:33

ரஜினியை விட வயது அதிகமான அமிதாப் பச்சன் இன்னும் நடிக்க வில்லையா? எம்ஜிஆர், சிவாஜி எல்லாம் வயதாகியும் நடித்தார்கள். ரஜினியின் எளியத் தோற்றம் உம் போன்றோரை எள்ளி நகையாட வைக்கிறது. ஆனால் டோப்பா வைத்து கொண்டு நித்தம் ஒரு நாடகம் போடும் கயவர்களை தலைவர்களாக்கி நாட்டை சீரழிக்கிறீர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை