மேலும் செய்திகள்
தினமும் ஒரு சாஸ்தா:தமிழக ஐயப்பன் கோயில்கள்-27
12-Dec-2024
ஐயப்பன் தன் மனைவியரான பூர்ணா, புஷ்கலாவுடன் உள்ள கோயில் பற்றிய தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.சொத்துப் பிரச்னையா...
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் உள்ளது கேட்டவரம்பாளையம். இங்கு அருள்பாலிக்கும் சாஸ்தாவை வணங்கினால் சொத்து பிரச்னை தீரும். பசுமையாக இருக்கும் இந்த ஊர் பர்வதமலை, துளசிமலை, நட்சத்திர மலைகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு துளசி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கோயில். யானை மீது வீராசனத்தில் அமர்ந்து கையில் சாட்டையுடன் காட்சி தருகிறார் சாஸ்தா. புதர் செடிக்கு மத்தியில் இருந்து சாஸ்தாவின் சிலை கண்டெடுக்கப்பட்டது. சன்னதியை மேம்படுத்தும் ஏற்பாடுகள் நடக்கிறது. ஞாயிறன்று சாஸ்தாவிற்கு நெய் விளக்கேற்றினால் பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்னை தீரும்.திருவண்ணாமலை - போளூர் சாலை வழியாக 48 கி.மீ., நேரம்: காலை 7:00 - இரவு 7:00 மணிதொடர்புக்கு: 97512 92054அருகிலுள்ள தலம்: ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் 36 கி.மீ., நேரம்: காலை 7:00 - 11:00 மணி மாலை 4:30 - 7:30 மணிதொடர்புக்கு: 94860 46908
12-Dec-2024