உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமும் ஒரு சாஸ்தா: தமிழக ஐயப்பன் கோயில்கள்-24

தினமும் ஒரு சாஸ்தா: தமிழக ஐயப்பன் கோயில்கள்-24

ஐயப்பன் தன் மனைவியரான பூர்ணா, புஷ்கலாவுடன் உள்ள கோயில் பற்றிய தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.

கல்யாண வரம் தருபவர்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள உடையார்கோயிலில் கல்யாண வரத சாஸ்தா இருக்கிறார். பூர்ண புஷ்கலையுடன் அருள்பாலிக்கும் இவரை வணங்கினால் கல்யாணத்தை முன்நின்று நடத்தி வைப்பார். பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று சாஸ்தா அவதரித்தார். அன்று அவரை தரிசிப்பது விசேஷம். அதன் அடிப்படையில் இங்கு மாதாந்திர உத்திர நட்சத்திரத்தன்றும், அமாவாசை, பவுர்ணமியன்று சிறப்பு பூஜை நடக்கிறது. வேண்டுதல் நிறைவேறியதும் பொங்கல் வைப்பது விசேஷம். வளாகத்தில் சேர்வராயர், மதுரைவீரன், கருப்பண்ணசாமி, காத்தவராயன் பேச்சாயி அம்மன், மாரியம்மன் ஆகியோருக்கு சன்னதி உள்ளன. பாபநாசத்தில் இருந்து 14 கி.மீ., தஞ்சாவூரில் இருந்து 18 கி.மீ., நேரம்: காலை 10:00 - 1:00 மணி மாலை 5:00 - 7:00 மணிதொடர்புக்கு: 94452 79536அருகிலுள்ள தலம்: தஞ்சாவூர் குபேரபுரீஸ்வரர் 20 கி.மீ., நேரம்: காலை 6:00 - 11:00 மணி மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 96778 18114


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை