உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயிற்சியின் போது பாய்ந்த ஈட்டி; மூளைச்சாவு அடைந்த மாணவன்; தகவலை கேட்டு தாய் தற்கொலை முயற்சி

பயிற்சியின் போது பாய்ந்த ஈட்டி; மூளைச்சாவு அடைந்த மாணவன்; தகவலை கேட்டு தாய் தற்கொலை முயற்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் தனியார் பள்ளியில் ஈட்டி பாய்ந்து சிகிச்சையில் இருந்த மாணவன் கிஷோர் இன்று (ஜூலை 29) மூளைச்சாவு அடைந்தார். தகவலை கேட்டு மாணவனின் தாய் சிவகாமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் வடலூர் தர்ம சாலை பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன் வயது (35). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் கிஷோர் (வயது 15) வடலூர் சந்தை தோப்பு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கிஷோர் விளையாட்டிலும் ஆர்வமாக இருந்து சிலம்பம் போட்டியில் கலந்துகொண்டுமாவட்ட,மாநில அளவில் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 24ம் தேதி மாலை மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. அப்போது ஈட்டி எறிதல் பயிற்சியின் போது அங்கு நின்ற கிஷோரின் தலையில் ஈட்டி பாய்ந்து படுகாயம் அடைந்தார். அவர் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.சிகிச்சையில் இருந்த மாணவன் இன்று(ஜூலை 29) மூளைச்சாவு அடைந்தார். தகவலை கேட்டு மாணவனின் தாய் சிவகாமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது மாணவனின் தாய் நலமாக உள்ளார். மாணவன் கிஷோரின் உறவினர்கள் அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

metturaan
ஜூலை 30, 2024 11:09

விளையாட்டு துறை அமைச்சர் துறையை சரிவர கவனித்து இது போன்று வேறு எங்கும் எந்த விளையாட்டிலும் நடைபெறாமல் தடுக்க ஆவன செய்ய வேண்டும்


metturaan
ஜூலை 30, 2024 11:09

விளையாட்டு துறை அமைச்சர் துறையை சரிவர கவனித்து இது போன்று வேறு எங்கும் எந்த விளையாட்டிலும் நடைபெறாமல் தடுக்க ஆவன செய்ய வேண்டும்


Sundaram Muthiah
ஜூலை 30, 2024 10:40

இதுக்கும் காரணம் விடியல் ஆட்சியா.


Kasimani Baskaran
ஜூலை 30, 2024 05:52

பயிற்சியின் பொழுது அடிப்படை பாதுகாப்புக்கு என்ன செய்தார்கள் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பாதுகாப்பில் கவனம் செலுத்தவில்லை என்றால் என் சி சி போன்ற பயிற்சிகளின் பொழுது துப்பாக்கி குண்டு பாய்ந்து கூட பலர் உயிரிழக்கக்கூடும். ஆபத்தான பயிற்சி என்பதால் விரிவான வழிகாட்டுதல்கள் வேண்டும். மெத்தனம் என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலைக்குற்றம் சாட்டவேண்டும்.


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 29, 2024 21:34

ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொள்ளும் பெற்றோரின் நிலைமை பரிதாபத்திற்குள்ளானது. பாசம் அனைத்தையும் இருக்கும் ஒரே குழந்தையின் மீது வைக்கும் தாய்க்கு ஏற்படும் இழப்பு மிகவும் பரிதாபம். ஓம் ஷாந்தி.


PR Makudeswaran
ஜூலை 29, 2024 20:45

இதன் மூல கரணம் யார்? ஆனால் விடியல் ஆட்சிக்கு இப்படி ஒரு சப்போர்ட்டா? தமிழ்நாடு விடிந்த மாதிரியா இல்லை இடிந்த arikuriyaa?


Sundaram Muthiah
ஜூலை 30, 2024 10:29

அட பாவி இதற்கும் விடியல் அரசுக்கும் என்ன சம்பந்தம். நீ என்ன?


Svs Yaadum oore
ஜூலை 29, 2024 20:33

இந்த தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த திராவிட மாடல் பள்ளி கல்வி இயக்குனரகம் என்ன செய்தது ??.....எல்லாம் காசு பணம் லஞ்சம் என்று சீரழிந்தது ...அந்த பையனை வளர்த்து ஆளாக்க அந்த அம்மா மனசு என்ன பாடுபடும் ??..


aaruthirumalai
ஜூலை 29, 2024 19:38

அலட்சியம், அகம்பாவம், ஆணவம், அடாவடி இவைகளின் உச்ச கட்டம் தனியார் பள்ளிகள்.


கத்தரிக்காய் வியாபாரி
ஜூலை 29, 2024 19:22

ஆழ்ந்த அனுதாபங்கள்


முருகன்
ஜூலை 29, 2024 19:14

எந்தவொரு பள்ளியிலும் பாதுகாப்பு நெறிமுறைகளை காற்றில் பறக்க விடுவதால் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்