வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நன்றாக வெய்யில் அடிக்கிறது நேற்று முதல். என்ன வானிலை அறிக்கையோ
சென்னை:தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை சென்னை அருகே கரையை கடக்கும். இதனால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
தெற்கு வங்கக் கடலில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்து தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, சென்னைக்கு கிழக்கு, தென் கிழக்கில், 280 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது, நேற்று காலை நிலவரப்படி, மணிக்கு, 12 கி.மீ., வேகத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி தான் இதன் நகர்வு அமைந்துள்ளது. இது இன்று காலையில், சென்னைக்கு அருகில் தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது.இதன் காரணமாக, தமிழகத்தில் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.இன்று
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடப்பதால், இந்த மாவட்டங்களில் மணிக்கு, 45 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். கள்ளக்குறிச்சி, கடலுார், தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலுார், விழுப்புரம், வேலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழக கடலோர பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றாக வெய்யில் அடிக்கிறது நேற்று முதல். என்ன வானிலை அறிக்கையோ