உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நகராமல் நிற்கும் புயல்; வானிலை மையம் சொல்வது இது தான்!

நகராமல் நிற்கும் புயல்; வானிலை மையம் சொல்வது இது தான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பெஞ்சல் புயல் கரையை கடந்தாலும், 3 மணி நேரமாக (அதிகாலை 3-6 மணி வரை) நகராமல் புதுச்சேரி அருகே ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது' என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இது குறித்து, பாலச்சந்திரன் கூறியதாவது: பெஞ்சல் புயல் புதுச்சேரிக்கு அருகில், நேற்று மாலை, 5.30 மணியளவில் கரையை கடக்க துவங்கி, நேற்றிரவு 10.30 மணிக்கு 11 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், கரையை கடந்துள்ளது. கரையை கடந்தாலும் புதுச்சேரிக்கு அருகே நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ., வேகத்தில் நகர்ந்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dp6u8lj7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 3 மணி நேரமாக (அதிகாலை 3-6 மணி வரை) நகராமல் புதுச்சேரி அருகே ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு- தென்மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்து வரும் 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க கூடும். இதுவரை பதிவான தகவலின் அடிப்படையில், கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதி கனமழையும், 6 இடங்களில் மிக கனமழையும், 20 இடங்களில் கனமழையும் பதிவாகி உள்ளது.அதிகபட்சமாக, விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. புதுச்சேரியில் 46 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அக்டோபர் மாதம் 31ம் தேதி, 2004ம் ஆண்டு புதுச்சேரியில் 21 செ.மீ மழை பதிவாகி இருந்தது. ஆனால் தற்போது 46 செ.மீ மழை பதிவாகி உள்ளது. வானிலை எச்சரிக்கைகள், தொடர்ந்து கண்காணித்து தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Vijay D Ratnam
டிச 01, 2024 14:25

புதுச்சேரி, கடலூர் இரண்டுமே தரித்திரம் பிடித்த நரகம் சாரி நகரம். கடந்த 50 ஆண்டுகளில் இந்த இரண்டு ஊரும் ஏகப்பட்ட புயல் வெள்ள பாதிப்புகளை கண்டுகொண்டே இருக்கிறது. அதிலும் தென்னிந்தியாவின் சாராயக்கடை என்று அன்போடு அழைக்கப்படும் புதுச்சேரியை எடுத்துக்கொண்டால் அன்லிமிடெட் பாபுலேஷன். நெரிசலான நகரம், அளவுக்கதிமான வாகனங்கள், நீர் போகும் பாதைகளையெல்லாம் அழித்து வயல்வெளிகளில் நகர் அமைத்து, நீர் மேலாண்மை பற்றி எதுவுமே தெரியாத தற்குறி அதிகாரிகள், திட்டமிடல் இல்லாத நகர வளர்ச்சி என்று நாசமாக்கி வைத்து இருக்கிறார்கள். இன்றோடு இது முடியப்போவதும் இல்லை அடுத்து வரும் ஆண்டுகளிலும் இது நடக்கும். இதைவிட அதிக பாதிப்புகளை உண்டாக்கும். மக்களும் பழகிவிடுவார்கள். ரெண்டு நாள் ஒப்பாரி வைத்துவிட்டு ரேஷன் கார்டுக்கு ரெண்டாயிரம் ரூவா கொடுத்தால் மக்களும் சந்தோஷமாக வாங்கிகிட்டு சரக்கடிக்க போய்விடுவார்கள். பாவம் இந்த புதுச்சேரி அரசியல்வியாதிகள், அதிகாரிகள். மக்களுக்கு பணிசெய்ய முடியாமல் வீட்டுக்குள் முடங்க வேண்டியதாக உள்ளது. பேசாமல் அதன் இரண்டாவது பெரிய நகரமான, தொழில் மற்றும் துறைமுக நகரான காரைக்காலை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்பது அந்த மக்களின் எண்ணமாக உள்ளது. திருநள்ளாறு பகுதியில் புதுச்சேரியின் சட்டமன்றம், தலைமைச்செயலகம், அரசு அலுவகங்கள் அமைக்க தாராளமாக இடம் உள்ளது. தலைநகர் அமைக்க ஏற்ற இடம் ஆக இருக்கும்.


Perumal Pillai
டிச 01, 2024 12:12

இந்த மழை விடாது பல மாதங்கள் பெய்ய வேண்டும் . நீர் நிலைகள் நிரப்பவேண்டும் . சென்னை செழிக்க வேண்டும் . தீயவர்கள் திக்குமுக்காட வேண்டும். நல்லவர்கள் வாழ வேண்டும் .


athi athi
டிச 01, 2024 13:57

சூப்பர்


Barakat Ali
டிச 01, 2024 09:08

பெஞ்சல் புயல் கரையை கடந்தாலும், 3 மணி நேரமாக அதிகாலை 3-6 மணி வரை நகராமல் புதுச்சேரி அருகே ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது ..... எங்க துணை மன்னர் அதட்டினா அந்த ஆரிய புயல் ஓடியே போயிரும் ....


Kalyanaraman
டிச 01, 2024 09:54

"அந்த ரகசியம்" இளவரசருக்கு மட்டுமே தெரியும்.


Barakat Ali
டிச 01, 2024 12:07

தமிழ்நாட்டை வல்லரசு ஆக்குற ரகசியம் கூட அவருக்குத் தெரியும் சார் ..... ஆனா ஆரிய பாஜக அரசு அதை காப்பியடிச்சு சனாதன இந்தியாவை வல்லரசாக்கிடுமோ ன்னு பயப்படுறார் .....


வைகுண்டேஸ்வரன்
டிச 01, 2024 13:26

சூப்பர் சூப்பர். நன்றி.


MARI KUMAR
டிச 01, 2024 08:36

புயல் கரையை கடந்து விட்டது நிம்மதி பெரும் பாதிப்புகள் தவிர்த்த அரசுக்கு நன்றி


SRIRAM
டிச 01, 2024 09:36

அண்ணனுக்கு 200 பார்ச்சல்


vadivelu
டிச 01, 2024 10:50

மழையே வர வில்லையே , புயலும் தமிழகத்தில் இல்லியே. எங்கேயோ கடந்தால் அந்த அரசுக்குத்தானே நன்றி. தமிழ் நாட்டில் ஒரு சொட்டு மழை கூட இல்லை என்றுதான் எங்களை போன்றவர்களுக்கு தெரிந்த செய்தி. ஒரு ஏழை தமிழக ஊடகங்கள் எங்களுக்கு தெரிவிக்க வில்லையோ.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை