உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதைவிட்டா வேற சான்ஸ் கிடைக்காது! பட்டம் பெறும்போதே கவர்னரிடம் புகார் தந்த மாணவர்!

இதைவிட்டா வேற சான்ஸ் கிடைக்காது! பட்டம் பெறும்போதே கவர்னரிடம் புகார் தந்த மாணவர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவை, பாரதியார் பல்கலையில் கவர்னரிடம் முனைவர் பட்டம் பெற்ற மாணவர் பிரகாஷ், பல்கலை முறைகேடுகள் தொடர்பாக கவர்னரிடம் மனுவும் கொடுத்தார்.கோவை பாரதியார் பல்கலை 39வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். அப்போது, ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்று கொள்ள பிரகாஷ் என்ற மாணவன் மேடைக்கு வந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e9yp28bo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, அவர் கவர்னர் ரவியிடம் பல்கலை முறைகேடுகள் தொடர்பாக புகார் மனு அளித்தார். பி.எச்.டி., மாணவர்களிடம் முனைவர் பட்டம் பெற வழிகாட்டும் பேராசிரியர்கள் பணம் கேட்பதாக, பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.தனிப்பட்ட வேலைகளை, பேராசியர்கள் செய்ய சொல்கிறார்கள். பல்கலையில் நடக்கும் முறைகேடுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரகாஷ் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கவர்னர் ரவி புகார் மனுவை பெற்றுக்கொண்டார். இதையடுத்து, முனைவர் பட்டத்துடன் கவர்னர் ரவியுடன் பிரகாஷ் போட்டோ எடுத்துவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

isaac simson
அக் 15, 2024 07:11

இது பிஜேபி ன் முன்னெற்பாட்டு வேலை .


Barakat Ali
அக் 15, 2024 10:08

அதாவது ஊழலை ஒழிக்கும் முன்னெடுப்பை பாஜக மட்டுமே செய்கிறது என்கிறீர்... நல்ல பாராட்டுப்பத்திரம் .....


isaac simson
அக் 15, 2024 07:07

இது பிஜேபி முன்னேற்பாட்டு வேலை .


Bhuvanesh Ayyasamy
அக் 15, 2024 08:46

அவ்வாறாக இல்லை என்று காங்கிரஸ் கூட்டணியோ அல்லது இந்தி கூட்டணியோ நிறுபியுங்கள். பயன்படுவது மாணவர்கள் தானே. இது அரசு, தனியார், உபி, சங்கீ என எப்பேர்ப்பட்டதாக இருந்தாலும் கொடுத்து தான் ஆக வேண்டும்


Ramesh Sargam
அக் 14, 2024 20:14

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள். அதை சரியாக கடைபிடித்திருக்கிறார் அந்த மாணவர்.


நிக்கோல்தாம்சன்
அக் 14, 2024 20:14

இது மிகவும் கவனமாக ஆனால் சீரியஸாக எடுத்துக்கொள்ளப்படவேண்டிய புகார் , சில பேராசிரியர்கள் பெண்களை மிகவும் கீழ்த்தரமான முறையில் கையாளுகின்றனர்


Ram
அக் 14, 2024 20:14

சரியாக சொன்னார் , நான் தமிழக அரசு பல்கலையில் படிக்கும் மாணவர்களிடம் மறைமுகமாக பேராசிரியர்கள் லஞ்சம் பெறுவதை பார்த்துள்ளேன் .... இடவொதுக்கீட்டால் கடந்த எஸுபது ஆண்டில் நாம் சாதித்தது


T.Senthilsigamani
அக் 14, 2024 19:10

பிரகாஷ் ,கவர்னர் ரவியிடம் பி.எச்.டி., மாணவர்களிடம் முனைவர் பட்டம் பெற வழிகாட்டும் பேராசிரியர்கள் பணம் கேட்பதாக, குற்றம் சாட்டியுள்ளார். சபாஷ் துணிகரமான செயல் .ஆனால் பிரகாஷ் இனிமேல் தான் கவனமாக இருக்க வேண்டும் .முக்கியமாக .வீட்டுக்கு அருகே அதிகாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு சென்றுவிட்டு வரும் வழியில்


Jay
அக் 14, 2024 17:55

மருத்துவ படிப்புக்கும் இதே போன்று மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கிப்ட் கொடுப்பது என்பது இருந்தது. தற்போது நீட் தேர்வு வந்த பிறகு அது வெகுவாக குறைந்துள்ளது. தற்போதைய மாடலில் ஆழமாக மக்கள் மனதில் விதைக்கப்படுவது லஞ்சம் ஊழல் என்பதுதான்.


ManiK
அக் 14, 2024 16:56

திராவிட மாடல் Vs தைரிய மாடல் Well done by that student. Hoping that Governer will ensure to investigate and punish those greedy corrupt profesolsors.


Ms Mahadevan Mahadevan
அக் 14, 2024 16:19

அரசு அலுவலகம் முதல் பஞ்சாயத்து வரை லஞ்சம். எல்லா ஆட்சி இளும் சர்வ சாதரணமாக உள்ளது. லஞ்சம் கொடுத்தால் விரைவில் பிளான் அப்ரூவல் முதல் எல்லாம் நடக்கும் . பொது மக்கள் காரணமா ஊழியர்கள் காரணமா?


T.sthivinayagam
அக் 14, 2024 15:56

கண்ணா செட்டிங்கா


hari
அக் 14, 2024 18:23

amam 200 ruba kothadimaya. sanathana setup....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை