உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆயிரம் சந்தேகங்கள்: பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை இப்போதும் மாற்றி கொள்ள முடியுமா?

ஆயிரம் சந்தேகங்கள்: பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை இப்போதும் மாற்றி கொள்ள முடியுமா?

நான் பல ஆண்டுகளுக்கு முன், 'கலைமகள் சபா' என்ற நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தேன். என்னிடம் அந்த நிறுவனம் வழங்கிய உறுப்பினர் எண் மட்டுமே உள்ளது. நான் இழந்த பணமாவது கிடைக்குமா? அதற்கு நான் எப்படி, யாரை அணுகுவது?ஆர்.கமலக்கண்ணன், காராமணிக்குப்பம்நீதிமன்றம் தன் பணியை செய்து வருகிறது. கலைமகள் சபாவுக்கு உள்ள சொத்துக்களில் எத்தனை ஆக்கிரமிப்பில் உள்ளன என்று ஆராய்ந்து, அறிக்கை தாக்கல் செய்யச் சொல்லி, நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.இந்த வழக்கு அவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வரும் என்று தோன்றவில்லை. பொறுமையாக காத்திருப்பதைத் தவிர, முதலீட்டாளர்களுக்கும் வேறு வழியில்லை.நான் ஒரு நிறுவனத்தில் 100 பங்குகளை அந்நிறுவனம் வெளியிட்ட போது வாங்கி, 'ஷேர் சர்டிபிகேட்' வைத்திருந்தேன். வர்த்தகத்தில் ஈடுபடவில்லை. இடையில் நண்பர் ஒருவர், 'டீமெட்டீரியலைஸ்' செய்ய வேண்டுமென கூறி வாங்கி சென்றவர், திரும்ப தராமல் தட்டிக் கழிக்கிறார். நான் விசாரித்தபோது, கம்பெனிக்கு கடிதம் எழுதி வாங்கச் சொன்னார்கள். இ - மெயில் மூலமாக விண்ணப்பித்தும் இதுவரை பதில் இல்லை. என்ன செய்ய வேண்டும்?ஆர்.ஜெயசந்திரன், புதுச்சேரிநீங்கள் குறிப்பிடும் நிறுவனம் இன்னும் ஆக்டிவாகத் தான் இருக்கிறது. அவர்களுடைய வலைதளத்தில், 'ரிஜிஸ்ட்ரார் அண்டு ஷேர் டிரான்ஸ்பர் ஏஜென்ட்' விபரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து முயலுங்கள். அவர்களிடம் இருந்து பதிலே வரவில்லை என்றால், பின்னர் செபியின் குறைதீர் வலைதளமான https://scores.sebi.gov.in/ உங்கள் புகாரை பதிவு செய்யுங்கள்.என்னிடம் இரண்டு நிறுவனங்களின் பங்குகள், காகித சர்டிபிகேட்களாக உள்ளன. என் முகவரி மாற்றத்தை, அந்நிறுவனங்கள் பதிவு செய்யாததால், ஷேர்களும் ஈவுத்தொகையும், 'இன்வெஸ்டர் எஜுகேஷன் பண்டு'க்கு போய்விட்டன. உரிய தகவல்கள் கொடுத்து, அவற்றை மீட்கும் முயற்சியில் இறங்கினேன். கடைசியில், 'நிராகரிக்கப்பட்டது' என்ற தகவல் மட்டுமே வந்தது? என்ன செய்வது?ஆர். குருசாமி, சென்னைநிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்னவென்று உங்களுக்கு வந்த ஏதேனும் ஒரு கடிதத்திலேனும் குறிப்பிடப்பட்டிருக்கும். பெரும்பாலும் நீங்கள் பங்கு வாங்கும்போது கொடுத்துள்ள விபரங்களுக்கும், பணத்தை க்ளெய்ம் செய்யும்போது கொடுக்கும் விபரத்துக்கும் இடையே மாறுபாடு இருக்குமானால், நிராகரிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.மேலும், நிராகரிக்கப்பட பல காரணங்கள் உள்ளன. அந்த குறைகளை தீர்ப்பதற்கான வழி என்னவென்று பாருங்கள். வேறு வழியில்லை, மீண்டும் மீண்டும் முயன்று பார்க்க வேண்டியது தான்.வழக்கமாக ஐ.டி.ஆர்., சம்மிட் செய்யும் ஆடிட்டர், இந்த தடவை சில குளறுபடிகள் செய்து விட்டார். எனவே, நான் வேறு ஒரு ஆடிட்டர் வாயிலாக அடுத்த ஆண்டு வருமான வரி தாக்கல் செய்ய முடியுமா?மல்லிகை மன்னன், மதுரை. உங்கள் ஆடிட்டரை கேட்டுப் பாருங்கள். நீங்கள் தான் உரிய விபரங்களை உரிய நேரத்தில் கொடுக்கவில்லை என்று சொல்வார். ஆடிட்டரை மாற்றிக்கொள்வது உங்கள் சவுகரியத்தைப் பொறுத்தது. ஆனால், பலரும் கடைசி நாள் வரை இழுத்தடித்து தான் வருமான வரி தாக்கல் செய்கின்றனர் என்பது ஒரு பிரச்னை.இன்னொன்று கட்ட வேண்டிய வரித் தொகையை குறைத்து கொடுக்கவில்லை; நான் சொல்வதை அவர் காது கொடுத்து கேட்கவில்லை என்றெல்லாம் ஆடிட்டர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளையும் கேட்கிறேன்.இன்றைக்கு இதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. குளறுபடி என்ன என்பதை கவனித்து, அதை இப்போதே சீர்திருத்தி, மறுமுறை ஐ.டி.ஆர்., படிவத்தை தாக்கல் செய்ய முடியுமா என்று பாருங்கள். அடுத்த ஆண்டு இதே தவறுகள் நேராமல் தடுக்கலாம்.'எச்1பி' விசா கட்டணத்தை, அமெரிக்கா திடீரென உயர்த்த வேண்டிய அவசியமென்ன? இதனால் கல்வி கற்கவோ, வேலை வாய்ப்பிற்கோ அமெரிக்கா செல்பவர்களுக்கு பாதிப்பு உண்டா?அ.யாழினி பர்வதம், சென்னை.தங்கள் நாட்டு பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, வெளிநாட்டினரை அமெரிக்காவுக்குள் வரக்கூடிய வழிகளை அடைக்கின்றனர். இப்போதும் கல்வி கற்க அங்கே செல்லலாம்.ஆனால், அப்படியே அங்கேயே வேலைவாய்ப்பு பெற்று தங்கி விடலாம்; எதிர்காலத்தை உருவாக்கி கொள்ளலாம் என்ற கனவு மட்டும் வேண்டாம். 2029 வரை இது தான் சூழல். அதற்கு பிறகு என்ன ஆகிறது என்று பார்ப்போம்.என் மாமியார் சமீபத்தில் மறைந்தார். அவரிடம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் கிடைத்தன. அதை என்ன செய்வது? வங்கியில் மாற்றலாமா?எஸ்.ராஜதுரை, மின்னஞ்சல்.ஒன்றும் செய்ய முடியாது. பழைய நோட்டுகளை திரும்ப வாங்கி கொள்வதற்கான காலகட்டம் முடிந்துவிட்டது. பெரிய அளவில் எங்கே பணம் கிடைத்து, சட்ட ரீதியாக நீதிமன்ற உத்தரவு கொடுத்தால் மட்டும், பழைய நோட்டுகளை ஆர்.பி.ஐ., திரும்ப வாங்கிக் கொள்கிறது. மற்றபடி அந்தப் பணத்துக்கு இனி மதிப்பில்லை. பழைய நோட்டுகளை சேகரிப்பவர்கள் யாரேனும் கேட்டால், அவர்களுக்கு அதை விற்பனை செய்யலாம்.வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.ஆயிரம் சந்தேகங்கள்தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும்.ஆர்.வெங்கடேஷ்gmail.comph: 98410 53881


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Sathia moorthy
செப் 29, 2025 20:21

ரிசர்வே பேங்க் சென்று மாற்றி கொள்ளலாமே


Swetha S
அக் 01, 2025 01:20

மாத்த முடியுமா


sasikumaren
செப் 29, 2025 18:10

என் நண்பனின் வயதான அம்மா அவர்கள் விவரம் தெரியாமல் பீரோவில் இரண்டாயிரம் ரூபாய் இருபது ரூபாய் நோட்டுகளை ஒளித்து வைத்து விட்டார் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் எடுத்து கடைக்கு சென்றால் மாறாத ரூபாய் நோட்டுகள் என்று சொல்லி விட்டார்கள் இது நடந்து மூன்று வருடங்கள் ஆகி விட்டது வாடகை வீட்டில் வசிக்கிறார் அவரை போன்றவர்களுக்கு ஒரு முகாம் ஒன்றை நடத்தி அந்த பழைய நோட்டுகளை மாற்றி தர வேண்டும்.


Alphonse Mariaa
செப் 29, 2025 16:37

Ill take old notes for 1/10th value.


hariharan
செப் 29, 2025 13:51

இந்த கேள்வி பதில் பகுதியை தினமும் வழங்க வேண்டும்.


Sudha
செப் 29, 2025 13:48

Please wait for Rahul to swear in as PM


புண்ணியகோடி
செப் 29, 2025 13:38

தினமலர் இது போன்ற விளக்கங்களை அவ்வப்போது தொடர்ந்து வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும். செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா?


Ramkumar Ramanathan
செப் 29, 2025 12:39

good explanations


manobala
செப் 29, 2025 11:54

நடைமுறைக்கு ஒத்த அறிவுரைகள்.


டி சங்கரநாராயணன் ஈரோடு
செப் 29, 2025 11:48

அருமை நல்ல விளக்கம்


sundarsvpr
செப் 29, 2025 11:33

அரசு உத்தரவு போடுவது எளிது. உத்தரவிற்கு நோக்கம் இருக்கும். இதற்கு பாதிக்கத்தவர்கள் சிலர் இருக்கலாம் இந்த சிலர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சில்லறை வியாபாரிகள் போன்றோர் இருக்கலாம். இவர்களுக்கு விலக்கு அளிக்கலாம் இவர்கள் வங்கி கணக்கில் நிரந்தர வைப்பு தொகையாய் குறைந்தது 15 ஆண்டுகள் வைத்துக்கொள்ளலாம். சட்டம் காலத்தில் வங்கி கணக்கு இருக்கவேண்டும். தற்போது உயிருடன் இருக்கவேண்டும். அரசு பரிசீலித்தால் nallathu.


முக்கிய வீடியோ