உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பரமாச்சாரியார் பரிந்துரைத்த மூன்று அம்சத் திட்டம்: முடித்துக் கொடுத்து அசத்திய எம்ஜிஆர்

பரமாச்சாரியார் பரிந்துரைத்த மூன்று அம்சத் திட்டம்: முடித்துக் கொடுத்து அசத்திய எம்ஜிஆர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'எம்ஜிஆரை சந்திக்க வேண்டும்' என்ற பரமாச்சாரியாரின் வேண்டுகோள் எம்ஜிஆரின் செவிகளை எட்டியது. துறவியுடன் உறவாடல் என்பது எம்ஜிஆருக்கும் மனமொருமித்த குணமாகும்.ஒரு நாள் திடீரென்று அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் பயணித்த கார், காஞ்சி மட வாசலில் நின்றது. காரில் இருந்து இறங்கிய எம்ஜிஆர், மெதுவாக மடத்தில் உள்ளே நுழைந்தார். பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.மடத்துப் பொறுப்பாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வந்து எம்ஜிஆருக்கு வணக்கம் செலுத்தினர். 'பரமாச்சாரியார் சுவாமிகளைச் சந்திக்க வேண்டும்' என்று எம்ஜிஆர் அவர்களிடம் கேட்டார். அருகில் உள்ள குடிலில் பரமாச்சாரியார் அமர்ந்திருப்பதாக எம்ஜிஆருக்கு தகவல் சொல்லப்பட்டது. அங்கே செல்வதானால் நடந்துதான் போயாக வேண்டும். சந்துக்குள்ளே கார் நுழைவதற்கான வசதி வாய்ப்புகள் கிடையாது. இந்த தகவலும் எம்ஜிஆருக்கு விவரிக்கப்பட்டது. அடுத்த நிமிடம் எம்ஜிஆர் நடக்கத் தொடங்கினார். குடிலுக்குள் நுழைந்தார்.பரமாச்சாரியாரைச் சந்தித்தப் பரம திருப்தியில் பவ்வியமாக வணங்கினார் எம்ஜிஆர். அவருக்கு ஆத்மார்த்தமான ஆசி வழங்கிய பரமாச்சாரியார், அமர்த்திப் பேசினார். இருவருக்கும் இடையே பரஸ்பரம் பல உணர்வுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அப்போது எம்ஜிஆரிடம் பரமாச்சாரியார் மூன்று அம்சத் திட்டத்தைப் பரிந்துரைத்தார். கருத்தூன்றிக் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், 'இதனை முடித்து வைப்பது என் தார்மீகக் கடமை' என்றார்.எம்ஜிஆர் வந்திருப்பாகத் தகவல் நகரெங்கும் பரவி விட்டது. மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த இடத்தை மொய்க்கத் தொடங்கினர். இதைக் கவனித்த பரமாச்சாரியார், உடனே எம்ஜிஆருக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தார். பரமாச்சாரியாரின் பரிந்துரையின்படி அந்த மூன்று அம்சங்களையும் எம்ஜிஆர் நிறைவேற்றி முடித்து, ஆத்ம திருப்தியோடு ஆனந்தம் காட்டினார். அந்த மூன்று அம்சத் திட்டம் தமிழக மக்களுக்கு உழைப்பை ஊக்குவித்தது.

அவை எவை?

1.உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும்.2.மாநிலமெங்கும் மரக்கன்றுகளை நட வேண்டும்.3.சைக்கிளில் டபுள்ஸ் சென்றால் தண்டிக்கக் கூடாது.இவற்றைச் செயலாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்கனவே எம்ஜிஆருக்கும் இருந்திருக்கிறது. 'great men think alike' என்பது ஆங்கிலப் பழமொழி அல்லவா? எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் இந்த மூன்று அம்சங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட்டு விட்டன.துறவியின் தொண்டால் மாநாட்டைக் கண்டது மதுரை. மாநிலமெங்கும் மரக்கன்றுகள் மலர்ந்தன. இருவரை ஏந்திக்கொண்டு சைக்கிள் சவாரிகள் மிளிர்ந்தன.எம்ஜிஆர் பிறந்த நாளில், அவர் பரமாச்சாரியாரின் பரிந்துரைக்குச் செய்த பங்களிப்பை நினைவுகூர்ந்து பார்க்கிறேன்.- ஆர்.நூருல்லா, ஊடகவியலாளர்9655578786


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kannan
ஜன 16, 2024 21:02

ஆதி காலத்திலிருந்து உண்மையான சன்யாசிகளை மதிக்கும் அரசாங்கம் இருந்தது .அனால் இன்று நாத்திக திமுக அரசு இந்துமதத்தையும் தமிழகத்தையும் அழித்துக்கொண்டு இருக்கிறது.


mindum vasantham
ஜன 16, 2024 18:39

திமுக மற்றும் அதன் பி டீம் பிஜேபி இதை செய்ய வாய்ப்பில்லை


Natarajan Ramanathan
ஜன 16, 2024 17:13

சாய்பாபா வந்தால் கோபாலபுரம் புனிதம் அடையும். ஆனால் தீயசக்தி நுழைந்தால் சாய்பாபா ஆஸ்ரமே அசிங்கபட்டுவிடும்


Seshan Thirumaliruncholai
ஜன 16, 2024 16:13

இதையும் சொல்லிருந்தால் ஆச்சரியம் இல்லை. இதைத்தான் எம் ஜி ஆர் செய்துகொண்டுஇருந்தார். தி மு க வை எப்போதும் எதிர்க்கவேண்டும்.


Agni Kunju
ஜன 16, 2024 15:21

இதை இன்னொரு திருடன் சொன்னா நம்பவேண்டியது தான்.


Rajarajan
ஜன 16, 2024 12:20

மக்களின் செல்வன் திரு.MGR. இருந்தாலும் மறைந்தாலும், பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். நினைத்ததை முடித்தவன்.


Kalyanaraman
ஜன 16, 2024 11:39

புட்டபர்த்தி சாய்பாபா கலைஞரே அவரது கோபாலபுரம் இல்லத்தில் சென்று சந்தித்தார் பிறகு கலைஞர் தெலுங்கு கங்கை கால்வாய் திட்டத்திற்கு நிதி உதவி கூறினார் அதை சத்திய சாயி செய்து வைத்தார் உடன் இருந்தவர்கள் ஜனாதிபதியே உங்களைத் தேடி வருகிறார் நீங்கள் இவரை தேடி போனீர்களே ஏன் பதில் அவர்தான் ராஜராஜ சோழனாக இருந்தவர் இது நடந்த உண்மை சம்பவம்


ஆரூர் ரங்
ஜன 16, 2024 15:29

வரி வசூல் செய்யும் அரசே செய்ய வேண்டிய கடமையை ஆந்திர ஹிந்து சாமியாரை வீட்டுக்கே வரவழைத்து கெஞ்சிக் கூத்தாடி செய்யக் கேட்டது பெருமையா?????


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை