உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒன்றுபட்ட அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் கூட்டணி; சைதை துரைசாமி வலியுறுத்தல்

ஒன்றுபட்ட அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் கூட்டணி; சைதை துரைசாமி வலியுறுத்தல்

சென்னை: 'தி.மு.க.,வை வீழ்த்த வேண்டுமென்றால், அ.தி.மு.க., ஒன்றுபட வேண்டும்; பா.ஜ.,வுடன் கூட்டணியும் அவசியம் தேவை' என்று சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tt0kc3d9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு சில ஆலோசனைகள் சொல்ல விரும்புகிறேன். பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.,வினரை ஒற்றுமைப்படுத்த வேண்டும். பா.ஜ., மற்றும் தோழமைக் கட்சிகளை ஒருங்கிணைத்து பலமான கூட்டணி அமைத்து தி.மு.க.,வை வீழ்த்துவது மிகவும் அவசியம்.அராஜகம், அரசியல் கொள்ளை, ஊழல் போன்றவைகளிலிருந்து தமிழகத்தை மீட்டு, மீண்டும் மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும்.கட்சியின் தொண்டர்களை 1972ல் உற்சாகமாகப் பணியாற்றிய, அந்த பழைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.தொண்டர்களையும், பொதுமக்களையும் ஒருங்கிணைத்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல எம்.ஜி.ஆர்., மேற்கொண்ட சில அரசியல் முடிவுகளை நினைவூட்ட விரும்புகிறேன்.* மத்திய அரசுடன் நட்போடு பழகி தேர்தலில் கூட்டணி அமைத்தே தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.* இந்திரா மீண்டும் பிரதமரானபோது, தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி கலைக்கப்பட்டது. தேர்தல் பிரசாரத்தில் மக்களிடம் சென்று, 'என்ன தவறு செய்தேன் என் ஆட்சியை கலைத்தார்கள்? தீர்ப்பளியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். மீண்டும் எம்.ஜி.ஆர் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார்.* அதனை தொடர்ந்து காங்கிரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து தி.மு.க வை தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.* திருப்பத்துார் இடைத்தேர்தலில் காங்கிரஸ் தி.மு.க கூட்டணி வேட்பாளரான அருணகிரிக்கு தானே வலியச் சென்று ஆதரவு கொடுத்தார்.* தி.மு.க., கூட்டணியை பிரிக்க வேண்டும் என்பதற்காக காங்கிரசுக்கு பிரசாரம் செய்து வெற்றிபெற வைத்தார். அது அன்றைக்கு மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி மத்திய அரசுடன் நல்ல நட்பு உருவானது.இப்படி அரசியல் முடிவுகள் எடுக்கின்ற போது கட்சி நலன், மக்கள் நலன், தொண்டர்கள் நலன் என்ற வகையில் எம்.ஜி.ஆரின் அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்.மத்திய அரசோடு எப்போதும் மோதல் போக்கை கடைப்பிடிக்கமாட்டார். இந்த அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தால் கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லலாம்.கூடிவாழ்ந்தால் கோடி நன்மை... குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை... மறப்போம், மன்னிப்போம்... எனவே ஒற்றுமையுடன் கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல மத்திய பா.ஜ., வோடு இணைந்து பலமான கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகளை ஒற்றுமைப்படுத்த வேண்டும்.பா.ஜ., மற்றும் தோழமைக் கட்சிகளை இணைத்து 2026ல் பலமான வெற்றி கூட்டணி அமைத்து கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும்.இவ்வாறு சைதை துரைசாமி அறிக்கையில் கூறியுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

R.P.Anand
ஏப் 05, 2025 19:39

எடப்பாடி தோல்வி களை தொடர்ந்து பார்த்திருப்பர் என்று நினைக்கிறேன்


Vijay Venkatesan
ஏப் 03, 2025 15:29

அடிமையாய் வாழ அழைக்கிறார் ... ஐயா


Vijay Venkatesan
ஏப் 03, 2025 15:28

சுருக்கமாக அடிமையாய் எப்போதும் போல் வாழ்வோம் அதுவே அதிமுக வின் அடையாளம், பெருமை ..


Ganesan G
ஏப் 03, 2025 09:52

அ தி மு க என்று பேசுவதை விட சைதை துரைச்சாமி அவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டு கருத்து தெரிவிக்கலாமே


K.Ramakrishnan
ஏப் 02, 2025 21:52

இவரு அதிமுகவில் இருக்கிறாரா? இல்லையா? புத்திமதி சொல்கிற அளவுக்கு இவர் அறிவாளியா? இவர் சொல்வதை கேட்கிற அளவுக்கு பழனிசாமி என்ன ஒன்றும் தெரியாதவரா? அதிமுக இனி தேறாது என்று கட்சியில் இருந்து ஒதுங்கியே இருப்பவர் தானே இவர்.. இவருக்கு ஏன் அதிமுக மீது திடீர் அக்கறை?