உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் ஒரு நடை பயணம்?

மீண்டும் ஒரு நடை பயணம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'என் மண்; என் மக்கள்' என்ற தலைப்பில் நடை பயணம் நடத்தி, தமிழகத்தின், 234 தொகுதிகளையும் ஒரு ரவுண்ட் வந்தார், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை. இந்த பாத யாத்திரைக்கு, மக்களிடையே பலத்த வரவேற்பு இருந்தது. இதனால் பா.ஜ.,விற்கு ஏதாவது பலன் உண்டா என்பது, ஜூன் 4ல் தெரியவரும்.பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஆகியோர், அண்ணாமலையின் நடை பயணத்திற்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகம்அடைந்தனர்.இதையடுத்து, அண்ணாமலையின் அடுத்த நடை பயணத்திற்கு கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாம். தமிழகத்தின் தென் மாவட்டங்களை குறி வைத்து, இந்த பயணம் இருக்கும் என கூறப்படுகிறது. அதிலும், குறிப்பாக, மீனவர்கள் அதிகம் வசிக்கும், 10 தென் மாவட்டங்களில் இந்த நடை பயணம் இருக்கும். 'விரைவில் கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமை மீட்கப்படும்' என்பது தான், நடை பயணத்தின் கோஷம் மற்றும் குறிக்கோள்.தமிழக சட்டசபை தேர்தல் 2026 ஏப்ரலில் நடைபெற உள்ளது. அதற்கு முன், இந்த நடை பயணத்தை அண்ணாமலை மேற்கொள்வார் என்கின்றனர். 'கச்சத்தீவை தி.மு.க.,வும், காங்கிரசும் இலங்கைக்கு துாக்கி கொடுத்து விட்டனர்' என்பதற்கான ஆதாரங்களை, பா.ஜ., வெளியிட்டுள்ளது. இந்த விஷயத்தை சட்டசபை தேர்தலில் பெரிதாக்க பா.ஜ., முடிவெடுத்துள்ளதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Alayam
ஏப் 22, 2024 18:10

அண்ணாமலையின் கரங்கள் வலு பெற நல் உள்ளம் படைத்தவர்கள் ஒன்றினைவோம்


K.n. Dhasarathan
ஏப் 21, 2024 20:12

அண்ணாமலை பிரதமர் போல பிறர் மீது குறை சொல்லும் அரசியலாய் விட்டு விட்டு ஏதாவது மக்களுக்கு நல்லது செய்ய பாருங்க சும்மா நடைபயணம் அது இது என்று காலத்தை வேஸ்ட் பண்ணாதீங்க


Arachi
ஏப் 21, 2024 16:30

நடைப்பயிற்சி நல்லதுதான் இரத்தத்தில் சர்க்கரை குறையும்


Arachi
ஏப் 21, 2024 16:26

இவர் ஒரு கோயபெல்ஸ் இயற்கையாகவே சர்வாதிகாரிக்கு உறுதுணையாக இருக்கும் பண்புகள் இருக்கும்


Bhakt
ஏப் 21, 2024 19:46

உப்பு போட்டு தின்றாலும் உடன் பிறப்புகளுக்கு சூடு சுரணை இருக்காது இயற்கையாகவே திருட்டு கழங்கங்களுக்கு அடிமைகளாக இருக்கும் பண்புகள் இருக்கும்


hari
ஏப் 21, 2024 14:43

தமிழ்நாடைவிட்டு வெளியே தேர்தல் பிரச்சரித்திருக்கு திமுக வரவேண்டாம்.... கார்கே சொல்லிட்டாரு


hari
ஏப் 21, 2024 14:41

மத்த மாநிலத்துல திமுக உள்ளே வர வேண்டாம் ................ டென்ஷன் ஆகலையோ


கனோஜ் ஆங்ரே
ஏப் 21, 2024 13:17

மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தாதானே, கச்சத்தீவை மீட்க முடியும் அது சரி பத்து ஆண்டுகளா, பாஜக ஆட்சிதானே ஏன் மீட்கலை? இன்னா திடீர்னு தமிழ்நாட்டு மீனவர்கள் மேலே பாசம் பொங்குது இலங்கை ராணுவம், தமிழக மீனவர்களை பிடிப்பதும், அடிப்பதும், மீன் வலைகளை அறுப்பதும் கடந்த பத்து வருஷமா நடந்துட்டுதானே இருக்கு என்ன செய்தீர்கள் மீண்டும் வேன் பயணம்ச்சே நடைபயணமா? அதுவரைக்கும் இவர் கட்சி மத்தியில் ஆட்சியில் இருக்கணும் அப்படியே இருந்தாலும், இவர் மாநில கட்சித் தலைவரா இருக்கணும் இதெல்லாம் நடக்குற காரியமா?


அப்புசாமி
ஏப் 21, 2024 11:23

இப்பவே நடைபயணத்தை ஆரம்பிச்சு 2026ல முடுச்சு ஆட்சியைப் புடிக்கப் பாருங்க.


krishna
ஏப் 21, 2024 16:57

ARAI VEKKADU MUDHALIL THUNDU SEATTU ILLAMA SARVAADHIKARI AVARGALAI PESA SOLLUNGA.


venugopal s
ஏப் 21, 2024 09:12

அண்ணாமலை எத்தனை தடவை பாதயாத்திரை போனாலும் பிரதமர் மோடி அவர்கள் எத்தனை தடவை தமிழகத்தில் பிரசாரம் செய்தாலும் தமிழக மக்களுக்கு வட இந்திய கட்சியான பாஜக மீது நம்பிக்கை பிறக்காது!


செல்வேந்திரன்,அரியலூர்
ஏப் 21, 2024 10:18

ஏலே திமுக கொத்தடிமையே உன்னோட விருப்பத்தை இங்கு வந்து அளக்காதே மக்கள் இப்போது தெளிவாகி விட்டார்கள்.


மோகனசுந்தரம்
ஏப் 21, 2024 12:46

வாய்க்கு வந்தபடி எல்லாம் உளறுவார்கள். அவர்களை பொருட்படுத்த வேண்டியதில்லை.


J.V. Iyer
ஏப் 21, 2024 07:13

தமிழக மாக்களுக்கு பணநோட்டுக்கள், பாட்டில்கள் இவைகளை காண்பித்தால் பழசை மறந்து மீண்டும் மீண்டும் இந்த இரண்டு தீய கும்பல்களுக்கே வோட்டு போடும் மயக்கம் மாறினால்தான் தமிழக மக்களுக்கு நல்லது பிறக்கும் இது மது, குடி, போதை இவற்றைவிட கொடுமையானது


கனோஜ் ஆங்ரே
ஏப் 21, 2024 13:19

உங்கள சேர்க்கவே மாட்டாங்க.... நாங்க செஞ்சிறுவோம்னு இப்ப பாருங்க தமிழ்நாட்டு மக்கள் வச்சி செஞ்சிட்டாங்க!


மேலும் செய்திகள்