உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலவச பஸ்சில் டிக்கெட் வாங்காத பெண்ணுக்கு ரூ.200 அபராதம்

இலவச பஸ்சில் டிக்கெட் வாங்காத பெண்ணுக்கு ரூ.200 அபராதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பல்லடம்: இலவச பஸ்சில் டிக்கெட் வாங்காமல் இருந்த பெண்ணுக்கு, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.திருப்பூர் - புளியம்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ், நேற்று காலை, பல்லடம் நோக்கி வந்தது. தெற்குபாளையம் பிரிவில், ஒரு பெண் பஸ்சில் ஏறினார். அவர் டிக்கெட் வாங்கவில்லை. பஸ் ஸ்டாண்டில் இறங்கிய போது, அவர் டிக்கெட் வாங்காதது குறித்து, டிக்கெட் பரிசோதகர் அப்பெண்ணிடம் கேட்டார்.இதற்கு, 'ஆண்கள் பகுதியிலேயே நடத்துனர் இருந்ததால், டிக்கெட் எடுப்பதற்குள் பஸ் ஸ்டாண்ட் வந்துவிட்டது' என்றார். ஏற்க மறுத்த பரிசோதகர், 200 ரூபாய் அபராதம் விதித்தார்.'ரொக்கமாக பணம் இல்லை' என அப்பெண் கூறியதை அடுத்து, நடத்துனரின் 'ஜி பே' எண்ணுக்கு தொகை அனுப்ப பரிசோதகர் கூறியுள்ளார். இதையடுத்து, 200 ரூபாயை அனுப்பிய அப்பெண், அங்கிருந்து சென்றார்.டிக்கெட் பரிசோதகர் செந்தில்வேலனிடம் கேட்டதற்கு, ''பெண்களுக்கு இலவச பயணம் என்றாலும், டிக்கெட் வாங்க வேண்டியது அவசியம். டிக்கெட் வாங்காமல், மொபைல் போனில் அவர் 'பிஸி'யாக இருந்துள்ளார். பஸ் ஸ்டாண்டில் இறங்கியபோது, விதிமுறைப்படி அபராதம் விதிக்கப்பட்டது.''பணத்தை 'ஜிபே' மூலம் நடத்துனருக்கு செலுத்திய அப்பெண், ரசீது பெறாமல் அங்கிருந்து கிளம்பினார். நடத்துனர் வசூலித்த, 200 ரூபாய் அபராதம் உடனடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. நடத்துனரிடம் அபராதம் வசூலித்ததற்கான ரசீது வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Kannan
அக் 30, 2024 01:13

சுயநல விடியா ஆட்சியில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்... மகளிர் மட்டுமே ஸ்பெசல் பஸ் தான்.


Kannan
அக் 30, 2024 01:05

அட நீங்க வேற.. இந்த பிரச்னை சென்னையில் வராது. தமிழ்நாட்டில், சென்னையில் மட்டும் தான் கன்டக்டார்கள் மாற்றுத்திறனாளிகளை விட மோசம். தங்கள் இருக்கையை விட்டு எழுந்துபோய் டிக்கட் கொடுக்க மாட்டார்கள் 97% பேர்கள். 2 பெண்கள் முன்பக்கம் ஏறி இருப்பார்கள். நம்ப புக்கிங் கிளெர்க் கன்டக்டர், 4,5 டிக்கட் கொடுத்து அனுப்பிவிட்டு... கம் போட்டு ஒட்டியவன் போல உட்கார்ந்தே இருப்பார். காசு கொடுத்து டிக்கட் வாங்கிப்போகும் ஆண்கள் நின்றுகொண்டுத்தான் பயணிக்கனும். பெண்களின் ஆக்கிரமிப்பை புலம்பிகொண்டு போகனும். விடியா ஆட்சியின் நிர்வாகத்திறமைல


sankar
அக் 29, 2024 17:47

ஒன்றை பத்தாக எழுதும் கலை


Ramesh Sargam
அக் 29, 2024 12:37

இலவசம், ஆனாலும் டிக்கெட் வாங்க வேண்டும். என்ன மடத்தனம்?


Balaji Bakthavathsal
அக் 29, 2024 14:46

இலவசப்பயணமாக இருந்தாலும் எத்தனை இலவசப்பயணங்கள் என்ற கணக்கெடுப்பிற்காக நடத்துனரால் பயணச்சீட்டு வழங்கப்படும். அதனை கேட்டு பெற வேண்டும்.


Ramar P P
அக் 29, 2024 09:56

இலவச பஸ்ஸில எதுக்கு டிக்கெட்


angbu ganesh
அக் 29, 2024 15:04

நானும் ஒரு நடத்துணரிடம் இது பற்றி கேட்டேன் அது ஒரு இன்சூரன்ஸ் purpose காக டிக்கெட் கொடுக்கறாங்களாம்


muthu kumar
அக் 29, 2024 09:17

உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா ???


S. Neelakanta Pillai
அக் 29, 2024 09:00

இது எப்படி இருக்குன்னா, ஹெல்மெட் போட்ட தீவிரவாதியின் திருடிய பைக்கை போக அனுமதித்த போலீஸ் ஹெல்மெட் போடாத நிரபராதியை தண்டித்தானாம்.


வாய்மையே வெல்லும்
அக் 29, 2024 08:48

.. இந்த பெட்டிச்செய்தியை எப்படி வர்ணிப்பது மைலார்டு ? தலையே சுற்றுகிறது. மகளீரிடம் எப்படி ஒருபக்கம் பேருந்தில் செல்ல இலவசம் இன்னொருபக்கம் இலவசசீட்டு பெறவில்லை என்றால் அபாரதமா??.. நெஞ்சு பொறுக்குதில்லையே கோமாளி அரசை பார்த்து.. ஹா ஹா ஹா


Jayaraman
அக் 29, 2024 08:24

Stage வருவதற்கு முன் பேருந்தை ஓரமாக நிறுத்தி அனைவருக்கும் டிக்கெட் கொடுக்க வேண்டும். அந்த முறை தற்போது இல்லை போலும்.


raja
அக் 29, 2024 07:48

துக்லக் கோமாளி விடியா மாடல் ஆட்சியில் இது போல் கேன தனங்கள் நிறைந்து இருக்கும்...