உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் செல்லக்கூடாது; மதுரை ஆதினத்துக்கு போலீஸ் தடை

திருப்பரங்குன்றம் செல்லக்கூடாது; மதுரை ஆதினத்துக்கு போலீஸ் தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: திருப்பரங்குன்றம் செல்ல மதுரை ஆதினத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த மலையில் இருக்கும் தர்காவில், ஆடு, கோழி பலியிடுவோம் என்று கூறி, இஸ்லாமிய அமைப்பினர் சிலர் கிளம்பிய நிலையில் போலீசார் அதற்கு தடை விதித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9p922sjs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எனினும், அவர்களில் சிலர், அசைவ உணவுகளை கொண்டு சென்று மலை உச்சியில் படிக்கட்டுகளில் வைத்து உண்ட படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இது, பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹிந்து அமைப்பினர் கடும் கண்டனமும் தெரிவித்தனர்.இந் நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்ல மதுரை ஆதினம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் போலீசார் அதற்கு அனுமதி மறுத்து விட்டனர். கோவிலுக்குச் செல்ல மதுரை ஆதினத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வண்ணம், அங்கு போலீசார் பாதுகாப்பு பணியிலும், கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

சண்முகம்
ஜன 26, 2025 08:04

ஒரு கோயிலின் மடத்தலைவரை கோயிலுக்கு போகாமல் தடுப்பது அடிப்படை உரிமை பறிப்பு. இதை கோர்ட்டுக்கு கொண்டு செல்லாத மடத்தலைவர் வேஸ்ட்.


நடராசன்
ஜன 26, 2025 05:00

வினாச காலே விபரீத புத்தி. முருகன் இந்த அசுர்ர்களை அழிப்பான். இந்துக்களுக்கு சொரணை ஏற்படுத்துவான்


பேசும் தமிழன்
ஜன 25, 2025 22:51

விடியாத திருட்டு மாடல் ஆட்சியில் இது எல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கும். கோவிலுக்கு செல்ல ஆதினம் அவர்களுக்கு தடை. ஆனால் மாற்று மத ஆட்கள் மட்டன் பிரியாணி சாப்பிட அனுமதி. மக்களே விழித்து கொள்ளுங்கள். இல்லையேல் உங்களை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.


தத்வமசி
ஜன 25, 2025 22:24

அடுத்த தேர்தலில் எப்படியெல்லாம் ஓட்டு வாங்கலாம் என்று தலைகீழாய் நின்று கடைசியில் தானிருக்கும் மதத்தை அவமதிக்கும் திராவிடக் கூட்டம்.


Ramesh Sargam
ஜன 25, 2025 22:14

போலீசின் அராஜகம், அட்டூழியம் ஒழியவேண்டும். அதற்கு மக்கள் திமுகவை ஒழிக்கவேண்டும். ஒரு ஹிந்து மத தலைவர் ஹிந்து கோவிலுக்கு செல்ல தடையா? ஆனால், நேற்று ஒரு இஸ்லாமிய மதம் சார்ந்த அமைச்சர் அங்கு செல்ல அனுமதி வழங்கியது இந்த திருட்டு காவல்துறை.


AMLA ASOKAN
ஜன 25, 2025 21:52

எப்படியாவது முஸ்லீம் வெறுப்பை வெளிப்படுத்தி மத நல்லிணக்கத்தினை சீர்குலைக்கும் முயற்சிகள் அநேகமாக முடிந்து விடும் என எதிர்பார்க்கலாம் . வேறு ஒரு பிரச்சினை இன்னும் துவங்கவில்லை . முஸ்லிம்கள் அமைதியாக அவரவர் வேலைகளை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் . தர்கா செல்வது தனி நபர் விருப்பம். மதரீதியான கட்டாயம் இல்லை .


Tetra
ஜன 25, 2025 21:15

பாவம். ஆதீனம். பாராட்டினாரல்லவா


Nagarajan S
ஜன 25, 2025 20:39

அதெப்படி மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருப்பரங்குன்றம் கோவிலுக்கு, அவர் செல்லக்கூடாது என்று எப்படி கட்டுப்பாடு விதிக்க முடியும்? நாடு எங்கே போகிறது?


D Natarajan
ஜன 25, 2025 17:36

என்ன செய்வது இனிமேல் யார் எங்கே போகவேண்டும் என்பதை இந்த விடியல் அரசு தான் முடிவு செய்யும் போலிருக்குது . முருகா நீ தான் துணை


sankaranarayanan
ஜன 25, 2025 17:35

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு மதுரை ஆதினம் செல்ல போலீசார் அதற்கு அனுமதி மறுத்து விட்டனர். பிறகு அவர் வேறு எங்கு செல்வார் அசெம்பளிக்கா செல்வார் இல்லை அரசாங்க அலுவலகத்திற்கா செல்வார்


புதிய வீடியோ