உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 ஆண்டு தலைமறைவுக்கு பிறகு செந்தில்பாலாஜி சகோதரர் ஆஜர்; நீதிமன்றம் உத்தரவு

2 ஆண்டு தலைமறைவுக்கு பிறகு செந்தில்பாலாஜி சகோதரர் ஆஜர்; நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்று (ஏப்.9) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். ஏப்ரல் 20ம் தேதி ஜாமின் உத்தரவாத தொகையாக ரூ.2 லட்சம் செலுத்த அசோக்குமார் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாக, 1.62 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளார் என்பது அவர் மீதான வழக்காகும். இந்த மோசடியில் அவரது சகோதரர் அசோக்குமார், 42, மற்றும் நெருங்கிய கூட்டாளிகள் கார்த்திகேயன், முன்னாள் உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட பல பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oqazga5c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தொடர் விசாரணையில், மோசடி தொகையில், 1.34 கோடி ரூபாய் செந்தில்பாலாஜி வங்கி கணக்கிலும், 29.55 லட்சம் ரூபாய் அவரது மனைவி மேகலாவின் வங்கி கணக்கிலும் செலுத்தப்பட்டுள்ளன. அதேபோல, 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆகியோர் கூட்டு சேர்ந்து, பினாமிகள் பெயரில் 10.88 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளனர்.இதற்கு அசோக்குமார் மனைவி, மாமியார் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஓராண்டுக்கு பிறகு அவர் ஜாமினில் விடுவிக்கப்படார். தற்போது அவர் ஜாமினில் இருந்தாலும், அவர் மீதான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், இன்று (ஏப்ரல் 09) அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில், கடந்த ஆண்டு அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 2025ம் ஆண்டு ஜனவரியில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அசோக்குமார் உள்ளிட்டோர் ஏப்.9ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அசோக்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (ஏப்.9) தமது வக்கீலுடன் ஆஜரானார். அப்போது, 'செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் உள்ளன' என அமலாக்கத்துறை தெரிவித்தது. இதையடுத்து, 'ஒவ்வொரு நபரும் எவ்வளவு தொகை முறைகேடு செய்துள்ளனர்' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இதற்கு, 'ஒவ்வொரு நபரும் எவ்வளவு தொகை முறைகேடு செய்தனர் என்கிற தரவுகளை தெரிவிக்க கால அவகாசம் வேண்டும்' என அமலாக்கத்துறை தெரிவித்தது. பின்னர் ' குற்றப்பத்திரிக்கை நகலை வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 25ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.இதற்கிடையே செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமாருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஏப்ரல் 20ம் தேதி ஜாமின் உத்தரவாத தொகையாக ரூ.2 லட்சம் செலுத்த அசோக்குமார் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 53 )

Godfather_Senior
ஏப் 10, 2025 19:20

பேய்கள் அரசாண்டால், சாஸ்திரம் பிணம் தின்னும் எனும் பழமொழி நினைவுக்கு வருகிறது


P.Sekaran
ஏப் 10, 2025 11:32

நீதிமன்றம் 2 வருடமாக என்ன செய்தீர்கள் எங்கிருந்தீர்கள் என்று கூட கேட்கவில்லை. எல்லாம் கூட்டுகொள்ளை என்று தெரிகிறது அரசு ஆட்சி காவல்துறை நீதிதுறை எல்லாம் ஒன்று


S.V.Srinivasan
ஏப் 10, 2025 10:24

2 லட்சமெல்லாம் இவனுங்களுக்கு ஜுஜுபி. பாக்கெட்லேர்ந்து எடுத்து இடது கையாள தூக்கி எறிஞ்சுட்டு போய்ட்டேயிருப்பானுக. உடனே ஜாமீனும் கொடுத்துடுவீங்க. இதுக்குதான் இவனை 2 வருஷமா தேடிக்கிட்டு இருந்தீங்களா? என்ன சட்டமோ என்ன சடங்கோ. கொள்ளை அடிகிறவனுக, கொலை பண்றவனுகளுக்கு இப்போ நல்ல காலம்.


Vijay D Ratnam
ஏப் 09, 2025 23:17

ஷேர், டீல், செட்டில்மென்ட் பக்காவா முடிய இவ்ளோ காலம் ஆவுது. அமித்ஷா கனி கூட்டணி வலுவாக உள்ளது. திமுக பாஜக கள்ள உறவு பலமாக உள்ளது. அமித்ஷா இருக்கும் வரை திமுகவை எவராலும் அசைக்க முடியாது.


Naga Subramanian
ஏப் 09, 2025 21:44

கடந்த 2 வருடங்கள், செஞ்சோற்று கடன் தீர்க்க யார் கண்ணிலும் படாமல் அக்யாதவாசம் இருந்துவிட்டு வந்திருக்கும் அசோக் பாலாஜி அவர்களுக்கு, பாண்டவர்களுக்கு ஈடான ஒரு விருதினை வழங்கலாம். அல்லது, பாரத ரத்னா விருத்திற்கு தகுதியானவர் என்று கூட சான்று வழங்கலாம்.


மீனவ நண்பன்
ஏப் 09, 2025 20:37

மேட்ச் பிக்சிங் மாதிரி இருக்கே ..மாபியா பாணியில் அமைச்சர் குடும்பம் செயல்பட்டால் நாட்டில் போலீஸ் தேவையே இல்லை ...ரெண்டு வருஷம் ஒருத்தன் தலைமறைவான வாழ்க்கை வாழ்வது அதுவும் செல் போனில் பேசாமல் வாழ்வது போலீசுக்கு தெரியாது என்றால் இதை விட கேவலம் வேற எதுவும் கிடையாது


Veluvenkatesh
ஏப் 09, 2025 20:06

திராவிட நாடு போற்றுவோமே? ஒரு மிகப்பெரிய ஊழல் குற்றசாட்டு, மக்களை திட்டம் போட்டு மொட்டை அடித்த அரசியல் வியாதிகள். முதல் குற்றவாளி டாஸ்மாக் நாட்டின் மந்திரி, துணை குற்றவாளி இரண்டு வருடம் தலைமறைவு? ஸ்காட்லாந்தியர்ட்போலீசு இதுவரை ஒரு தேடுதல் அறிவிப்பு கூட வெளியிடவில்லை, தற்போது மிக நிதானமாக வக்கீலுடன் நீதிமன்றம் வருகிறார். கோர்ட்டும் சரி காவல் துறையும் சரி-ஏன் ஏதற்கு, எப்படி ன்று ஒரு கேள்வி கூட கேட்கவில்லையே ஏன்? ஆஃபீஸ்ர் இதெல்லாம் ரொம்ப ரொம்ப தப்புங்க.


Easwar Kamal
ஏப் 09, 2025 19:58

செந்தில் பாலாஜி தம்பி வெளியே , நேரு தம்பிகள் உள்ளே. என்ன சரிதானே


Naga Subramanian
ஏப் 09, 2025 19:47

தலைமறைவாக இருந்த தேசத்துரோகிக்கு, இரண்டு லட்சத்தில் ஜாமீனா?


Karthik
ஏப் 09, 2025 21:14

இந்த ரெண்டு லட்சமெல்லாம் அவுங்களோட ஒருநாள் டீ செலவுக்கே போதாதுங்க. அப்புறம், இது பிரிட்டிஷ் காலத்து ஜா"மீன்" தொகையாக இருக்க வாய்ப்புண்டு.


சுலைமான்
ஏப் 09, 2025 19:34

நீதிமன்றம் என்ற ஒன்று இல்லாமல் இருந்தாலே நாடு சுபிட்சமாக இருக்கும். நமது நாட்டின் சாபக்கேடு தமிழக நீதிபதிகள்.


Karthik
ஏப் 09, 2025 21:24

சமீபத்தில் ஐகோர்ட்டில் பணியாற்றும் நீதிபதிகள் சொத்து விவரம் தாக்கல் செய்ததாக நாளிதழில் படித்த ஞாபகம்..


புதிய வீடியோ