உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிகாலை பயணத்தில் விபத்து; கட்டுப்பாடு இழந்த ஆம்னி பஸ் மோதி நால்வர் பலி

அதிகாலை பயணத்தில் விபத்து; கட்டுப்பாடு இழந்த ஆம்னி பஸ் மோதி நால்வர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூர்: கரூர் அருகே, இன்று (மே 17) அதிகாலையில், டிரைவரின் கட்டுப்பாடு இழந்த ஆம்னி பஸ், வேன் மீது மோதியதில் சுற்றுலாப் பயணிகள் நால்வர் உயிரிழந்தனர்.பெங்களூரில் இருந்து நாகர்கோவில் சென்ற ஆம்னி பஸ் (இன்டர்சிட்டி ஸ்மார்ட் பஸ்), கரூர் செம்மடை அருகே டிராக்டர் மீது மோதியது. மோதிய ஆம்னி பஸ், கட்டுப்பாட்டை இழந்து சாலையின் எதிர்ப்புறத்துக்கு சென்று எதிர் திசையில், கோவில்பட்டியில் இருந்து ஏற்காடு சுற்றுலா செல்வதற்காக பயணிகள் 20 பேர் வந்த வேன் மீது மோதியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ib1gbjxt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில், சுற்றுலா வேனில் வந்த மூன்று பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். இன்னொருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும், 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மீட்பு படை வீரர்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் சிலர் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாலை பயணத்தை தவிருங்கள்!

இந்த விபத்து அதிகாலை 5:30 நடந்துள்ளது. இரவு நீண்ட நேரம் கண்விழித்து வாகனம் ஓட்டுவது டிரைவர்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே இரவு, அதிகாலை பயணத்தை தவிர்ப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

anwardeen 1948
மே 22, 2025 06:14

தூங்கி இருப்பான்


Jay
மே 18, 2025 08:45

டிராக்டர் வாகனம் நெடுங்காலையில் செல்வதற்கான வாகனம் இல்லை. சாப்பாடு சொல்லும் வாகனங்களில் பின்புறம் நைட் லைட், இன்டிகேட்டர் இருப்பதில்லை.


அப்பாவி
மே 17, 2025 22:02

கதிசக்தி ஹைன்.


N Sasikumar Yadhav
மே 17, 2025 18:22

டிராக்டரில் ஒளி பிரதிபலிப்பான் இருப்பதில்லை


R S BALA
மே 17, 2025 17:17

மொத்தத்துல சாலையில் போகும் எவன் உயிருக்கும் உத்திரவாதம் இல்ல..


Kulandai kannan
மே 17, 2025 16:32

30 ஆண்டுகளுக்கு முன்னெல்லாம், இரவு நேரங்களில் தனியார் வண்டிகளையே பார்க்க முடியாது.


R.P.Anand
மே 17, 2025 13:01

டிராக்டர் களில் போதிய லைட் இல்லாமை இதற்கு காரணம். இரவு நேரத்தில் மண் எடுப்பது. போன்ற செயல் கள் நடக்கின்றன . கடந்த காலங்களில் மஞ்சள் கலரில் மட்டுமே டிரெய்லர் இருக்கும் தற்போது எல்லா களரிலும் வருகிறது. அது இரவு நேரத்தில் தெரிவதில்லை.


sathish
மே 17, 2025 10:52

Hope you know the headlamps fitted in Omni buses. Even if the tractor didnt have the stickers, omni bus can spot the tractor. Cause ll be drivers drowsiness.


Asagh busagh
மே 17, 2025 12:02

Wrong The reaction time would have been too little and too late.


m.arunachalam
மே 17, 2025 10:47

ஏதோ ஒரு வகையில் விபத்து நடந்து கொண்டுதான் இருக்கிறது . டிராக்டர் சரியான எச்சரிக்கை விளக்கோ அல்லது ஸ்டிக்கர் இல்லாமலிருக்க வாய்ப்புள்ளது . மிக மிக கவனமாக செல்லவேண்டியுள்ளது . வளர்ந்த நாடாக ஆகும் வாய்ப்பு குறைவுதான் .


Kasimani Baskaran
மே 17, 2025 09:50

டிராக்டர் போதிய அளவு ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததா என்று தெரியவில்லை. அது போக கவனச்சிதறல் எதுவும் இருந்ததா என்று பார்க்க வேண்டும். அதுவும் இல்லை என்றால் சோர்வு கூட காரணமாக இருக்கலாம். சோகம் மட்டும் நிச்சயம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை