உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனிதவள மேம்பாட்டில் தனி கவனம்: முதல்வருக்கு சாதனையாளர் விருது

மனிதவள மேம்பாட்டில் தனி கவனம்: முதல்வருக்கு சாதனையாளர் விருது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மனிதவள மேம்பாட்டில் தனி கவனம் செலுத்தியதால், முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு உள்ளது.ஆசிய மனிதவள மேம்பாட்டு விருது அமைப்பு சார்பில், நேற்று இந்த விருது வழங்கப்பட்டது. தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஆசிய மனிதவள மேம்பாட்டு விருது அமைப்பின் நிறுவனரும், சைபர் ஜெயா பல்கலை இணை வேந்தருமான டத்தோ பாலன் கூறியதாவது:இதற்கு முன், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பிடல் வி.ராமோஸ், போஸ்னியாவின் பிரதமர் ஹாரிஸ் சிலாய்ஜிச், மலேஷியா நாட்டின் சராவக் முதல்வர் அடேனம் சதேம் போன்ற தலைவர்களுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. இந்தியாவில், 12 ஆண்டுகளுக்கு பின், இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த விருதுடன் சர்வதேச அளவிலான மாநாடு இரண்டு நாட்கள் சென்னையில் நடக்கிறது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 350 மனிதவள மேம்பாட்டு நிபுணர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் மனிதவள மேம்பாட்டு துறையில், முதல்வர் ஸ்டாலின் என்னென்ன செய்திருக்கிறார் என்பதை ஆய்வு செய்து, இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக, பல லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. வேலைவாய்ப்புகளை அதிகரித்து இருக்கின்றனர். இதனால், தமிழக இளைஞர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து உள்ளது. கல்வி மற்றும் மனிதள வள மேம்பாடு தான் வறுமையை ஒழிக்கும் என்பதை விருது வழங்கும் குழு உறுதியாக நம்புகிறது. இதற்காகவே நடப்பாண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது, முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 08, 2024 17:40

நன்றிக்கடனா டத்தோ பாலனுக்கு ஒரு தகைசால் சான்றோர் விருது பார்சல் .......


ஆரூர் ரங்
அக் 08, 2024 14:58

இந்த பிரேமுக்கும்.. கும் எவ்வளவு செலவாச்சு? சொல்லு


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 08, 2024 11:11

வேலைவாய்ப்புகளை அதிகரித்து இருக்கின்றனர். இதனால், தமிழக இளைஞர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து உள்ளது ... நம்பிட்டோம் .......


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 08, 2024 11:10

ஈரவெங்காயத்துக்கு கிடைத்த யுனெசுகோ விருது கிடைக்காதுங்களா ????


S. Balakrishnan
அக் 08, 2024 10:23

மனித வளம் என்றால் என்ன என்று துண்டு சீட்டு இல்லாமல் பேச இயலாதவருக்கு மனித வள மேம்பாட்டு விருதா ? காலத்தின் கொடுமை என்றால் இது தானோ என்னவோ ?


Lion Drsekar
அக் 08, 2024 09:46

எனக்கு மிகவும் பிடித்த பாடல் சொல்லத்தான் நினைக்கிறேன்... உள்ளத்தால் துடிக்கிறேன் வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன், வந்தே மாதரம்


ஹிந்துத் தமிழன்
அக் 08, 2024 08:35

ஆமாம் மனித வளத்தை சுரண்டி கொள்ளை அடித்ததில் முதலிடம் தானே திருடன் திருடன் தலைவனுக்கு கேடயம் வழங்குகிறார் அருமை அருமை


RAJ
அக் 08, 2024 08:10

கள்ளக்குறிச்சில சொந்தக்காரங்க இருக்காங்குபோல. . திருட விருதா இனி யாருக்கும் குடுத்திடாத .. .


Sham
அக் 08, 2024 08:07

இதைவிட கேவலமான விருது உலகில் எங்கும் இருக்காது.. விமானப்படை கண்காட்சியில் தமிழக அரசு நிர்வாக செயலிழப்பின் காரணமாக ஐந்து அப்பாவிகள் உயிர்கள் பரிதாபமாக துடிதுடித்து மரணம்.. நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனையில்.. சாம்சங் நிறுவனத்தில் அரசியல் அடாவடி வேலைநிறுத்தம். டாடா, ஆப்பிள் நிறுவனங்களில் மர்மமான முறையில் தீயினால் பெரும் சேதம்..அரசு இயந்திரம் முழுமையாக செயலிழந்து கோமாவில் கிடக்கிறது.. இங்கு கோமாளித்தனமாக வேடிக்கை விருது, சபாஷ்..சபாஷ்..


ManiK
அக் 08, 2024 07:57

குடும்ப மனித வளம்தான் ச்டாலின், கருணாநிதி குடும்பத்தின் மூலதனம். So, சரியான award தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை