உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்: முதல்வர் ஸ்டாலின்

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.போதைப்பொருட்களுக்கு எதிராக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால், கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போதைப்பொருள் ஒழிப்பு

போதைப்பொருள் நடமாட்டம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில், அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். போதைப்பொருள் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விட இன்னும் அதிகமாக கண்காணித்து போதைப்பொருள் கடத்தி வருபவர்களை கைது செய்ய வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ராமகிருஷ்ணன்
மே 17, 2024 08:36

அப்படி என்றால் டாஸ்மாகில் கஞ்சா விற்பனை விரைவில் துவக்குவோம் என்று அர்த்தம்.


என்றும் இந்தியன்
மே 16, 2024 17:51

திருட்டு திராவிட மடியல் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு திமுக ஆட்களின் போதை வியாபார நடமாட்டம் மிக அதிகமாக சாதாரண மக்களுக்கு கூட தெரிந்து விட்டது ஆகவே அதை ஒளித்து வைத்து வியாபாரம் செய்யுங்கள் என்று சொல்வது மிக இக தெளிவாகத்தெரிந்து விட்டது


GMM
மே 16, 2024 17:37

குதிரை பந்தயம் நிறுத்தம், புகை பிடித்தல் தடுப்பு முடிந்தது திமுகவிற்கு தொடர்பு இல்லாத முதலாளிகள் தொழில் ? போதை தரும் டாஸ்மாக் மூட மனம் இல்லை திராவிட முதலாளிகள் நிறுவனம் ? தென்னை, பனங்கள் அனுமதித்து பின் நிறுத்தலாம் அரசுக்கு வருவாய் ஈட்ட அதிக வழிகள் உண்டு போலீசை மிரட்டி என்ன பயன்? பின் புலம், செல்வாக்கு மிக்க அரசியல் பிரமுகர்கள் பஸ், ரயில் பயணம் கடினம் அரசு வருமான வரி செலுத்தும் மக்களுக்கு பொது வெளியில் முன்னுரிமை கொடுத்து மதிப்பு கொடுங்கள் டாஸ்மாக் gst உள்ளதா?


sethu
மே 16, 2024 17:16

தி மு க கல்லால் அடிக்காதீர்கள் என சொன்னால் அடிங்கனு அர்த்தம்


theruvasagan
மே 16, 2024 16:53

சீக்கிரமே கஞ்சா அபின் போன்றவைகளை டாஸ்மாக் பாணியில் மதிப்பு கூட்டு சேவையாக விற்பனை செய்ய ஆரம்பித்தால் இப்படியல்லாம் கம்பி கட்டவேண்டிய அவசியமே வராது.


krishna
மே 16, 2024 16:25

EEN THALA NIRAYA PANAM VANDHUDUCHAA..UNGA KUDUMBATHUKKU EVVALAVU VANDHAALUM PODHADHE.MUDHALI TASMAC IZHUTHU MOODUNGAL PAARKKALAMVAAYA THERANDHALE POI POYYAI THAVIRA VERU ILLAI.NAARI KEDAKKU DRAVIDA MODEL AATCHI.


Raa
மே 16, 2024 14:51

டாஸ்மாக் அமைச்சர் அந்த கூட்டத்தில் இருந்தாரா என்று கேளுங்கள்?


Mani . V
மே 16, 2024 14:05

அந்த சோமபானக் கடைகளில் விற்பது எல்லாம் என்ன பாஸ்?


Sridhar
மே 16, 2024 13:35

இதுவே அரசு இயந்திரங்களிடம் என்னென்ன தகவல்கள் இருக்குனு தெரிஞ்சு வேண்டியவர்களுக்கு பகிர்ந்தளிக்க உதவும் திருட்டு கும்பல் போதைய வச்சு கோடிகோடியா சம்பாதிப்பானுக,அவனுக வருமானத்துக்கு அவங்களே ஆப்பு வச்சுக்குவாங்கங்கறத நாங்க நம்பொனும்?


Ramesh Sargam
மே 16, 2024 12:48

இதுவரை அந்த போதைப்பொருள் கடத்தல் மன்னனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு, காவல்துறை உயர் அதிகாரி சன்மானம் கொடுத்ததைப்பற்றி இவர் வாய் திறக்கவில்லை இப்ப என்னவென்றால் போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆலோசனையாம் நம்பராமாதிரியா இருக்கு??? காதுல பூ


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி