உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக பேசியதால் நடவடிக்கை: ஐக்கிய ஜமாத் பொதுச்செயலர் பதவி பறிப்பு

பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக பேசியதால் நடவடிக்கை: ஐக்கிய ஜமாத் பொதுச்செயலர் பதவி பறிப்பு

கோவை: 'பா.ஜ.,- அ.தி.மு.க., கூட்டணி பலம் வாய்ந்தது. அந்த கூட்டணியை நாம் ஆதரிக்க வேண்டும்' என, அ.தி.மு.க., சிறுபான்மை பிரிவு மாநில இணை செயலர் அப்துல் ஜப்பார், பொதுக்கூட்ட மேடையில் பேசியதால், சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.இதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் பொதுச்செயலர் பொறுப்பில் இருந்து, அவர் நேற்று நீக்கப்பட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pbehm6xn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஆசனுார் அருகே உள்ள அரேபாளையத்தில், அ.தி.மு.க., சார்பில் மே தின பொதுக்கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது.அதில், அ.தி.மு.க., சிறுபான்மை பிரிவு மாநில இணை செயலர் அப்துல் ஜப்பார் பேசியதாவது:பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்தால், அ.தி.மு.க.,வுக்கு பலம் வரும். ஆள் பலம், அதிகார பலம் கிடைக்கும். இன்றைய தினம் அதிகார பலமே பேசுகிறது. அதனால், பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி சேர வேண்டுமென கூறி வந்தேன். இப்போது கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி வலுவான சக்தியாக உருவெடுக்கும்; அந்த சக்திக்கு, நாம் துணையாக இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.இவரது பேச்சு, கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதைத் தொடர்ந்து, ஜமாத் ஆட்சி மன்ற குழுவின், அவசர கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் பஷீர் அகமது தலைமை வகித்தார். அதில், 'அப்துல் ஜப்பார் பேச்சுக்கும், ஐக்கிய ஜமாத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அவரது பேச்சுக்கு ஜமாத்துகளும், ஜமாத் உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்ததால், கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் பொதுச்செயலர் பொறுப்பில் இருந்து, அப்துல் ஜப்பார் நீக்கப்படுவதாக அறிவித்திருக்கிறது.இது தொடர்பாக, அப்துல் ஜப்பாரிடம் விளக்கம் கேட்டபோது, “எதார்த்தத்தை பேசினேன்; அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் என்ன செய்ய முடியும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Madras Madra
மே 03, 2025 10:37

மொதல்ல ஜமாத்துக்கும் அரசியலுக்கும் என்ன சம்மந்தம்


Mecca Shivan
மே 03, 2025 09:57

செகுலரிஸ்ம் என்றால் அது இஸ்லாம் என்று கூறும் திராவிட அடி வருடிகளுக்கு சமர்ப்பணம் .. தீவிரவாதத்திற்கு மதம் இல்லை என்று கூறும்போதெல்லாம் நனறாக கவனித்து பாருங்கள் இசுலாமைய தீவிரவாத தாக்குதல் நடந்துஇருக்கும் . கோவை போல பஹல்கம் போல ..ஆனால் இஸ்லாமிய தீவிரவாதிகளை அவர்களுக்கு அடிக்கலாம் கொடுக்கும் இஸ்லாமியர்களை அரசே தாக்கினாலும் அது அப்பாவிகளை கொல்லும் அரசு என்று பழிபோடப்படும் ..இவர்களுக்கு துணை போவது இடது சாரி மற்றும் ஊழல் பணக்கார பத்திக்கையாளர்களும் ஹிந்து எதிர்ப்பு அரசுகளும்தான் ..


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 03, 2025 09:55

இதுலேர்ந்து என்ன தெரியுது ?? முதல்ல மதம் .... அப்புறம்தான் அரசியல், நாட்டு நலன் எல்லாம் ......


மூர்க்கன்
மே 03, 2025 10:31

அட சட்டுனு உண்ணப்பத்தி ஒத்துக்கிட்டீயே தங்கம்...


sridhar
மே 03, 2025 08:44

முஸ்லீம் என்றால் சுய சிந்தனையோ கருத்தோ இருக்கக்கூடாது , ஜமாத் சொன்னபடி திமுக கூட்டணிக்கு தான் வாக்களிக்க வேண்டும். இது என்ன நியாயம் . இப்போ மதமும் அரசியலும் கலக்கவில்லையா


Anantharaman
மே 03, 2025 08:37

மத வெறி மிக்க கும்பலை ஒழித்தாலே நாடு முன்னேறும்.


RAJ
மே 03, 2025 08:04

தேசவிரோதிகள் .நாட்டில் பல லட்சம் பேர் உள்ளனர்.


சந்திரன்
மே 03, 2025 07:49

இதுதான் அவனுங்க இவனுங்களதான் கேடு கெட்ட இந்துக்கள் தொப்புல் கொடி உறவுன்னு நம்பி ஏமாந்து போறானுவ


Mohanadas Murugaiyan
மே 03, 2025 12:27

சமீபத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியான பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளை பிடிக்கவோ, அப்பாவி சுற்றுலா பயணிகளை பாதுகாக்கவோ துப்பில்லாத ஒன்றிய அரசு, அந்த தாக்குதல் சமயத்தில் பலருடைய உயிரை காப்பாற்றிய உள்ளூர் மக்களும் இஸ்லாமியர் என்ற உண்மையை மறைத்து நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தும் ஒரு கட்சிக்கு அந்த சமூகத்தினர் ஆதரவு தருவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?


muthu
மே 03, 2025 06:29

Individual Muslim should not talk in support of BJP when majority muslims not liking central govt BJP as central govt BJP not yet disbursed the pending 18 Months DA arrears legally eligible and due to pensioners and central staff


ramani
மே 03, 2025 06:28

ஓட்டுரிமை ரத்து செய்ய வேண்டும்


Mohamed Younus
மே 03, 2025 05:27

அநாகரீக அரசியல் என்பது உங்களுக்கு கை வந்த கலை.


Kumar Kumzi
மே 03, 2025 07:57

எதுக்கு இங்க இருக்க உன் சொந்த நாடான பங்களாதேஷுக்கு போயிரு


சமீபத்திய செய்தி