உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 6 பேரையும் விடுவிக்க தூதரக ரீதியில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இது போன்று கைது செய்யப்படுவதைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை காவலில் உள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைந்து விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்தியா- இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவின் மூலம் மீனவர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ