உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிமன்ற பெயரை தவறாக பயன்படுத்திய பெண் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை

நீதிமன்ற பெயரை தவறாக பயன்படுத்திய பெண் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை

சென்னை: உயர் நீதிமன்றத்தின் பெயரை தவறாக பயன்படுத்திய பெண் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை ஜி.கே.எம்.காலனியைச் சேர்ந்த பாலசெந்தில்முருகன் என்பவர் தாக்கல் செய்த மனு: புளியந்தோப்பு மகளிர் காவல் நிலையத்தில், என் மீதும், என் குடும்பத்தினர் மீதும், வரதட்சணை கொடுமை செய்ததாக மனைவி புகார் அளித்தார்.மனைவி அளித்த புகாரில், எங்கள் மீது உயர் நீதிமன்ற உத்தரவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக, புளியந்தோப்பு மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ. ராஜேஸ்வரி, மாநகர கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் அம்பிகா இருவரும், உயர் அதிகாரிகள் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்துக்கு தவறான தகவலை தெரிவித்துள்ளனர்.இவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, உள்துறை, டி.ஜி.பி., மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் புகார் அளித்தேன். வரதட்சணை புகாரில் வழக்குப்பதிவு செய்யும்படி, உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. எனவே, நீதிமன்றத்தின் பெயரை தவறாக பயன்படுத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன் பிறப்பித்த உத்தரவு: உயர் நீதிமன்றத்தின் பெயரை தவறாக பயன்படுத்திய, இரு பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை விரைந்து முடித்து, தண்டிக்க வேண்டும் . இது தொடர்பாக மனுதாரர் அளித்த மனுவை, தமிழக அரசு, டி.ஜி.பி., மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் 8 வாரங்களுக்குள் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Senthil Kumar
ஜூலை 13, 2025 20:06

மகளிர் காவல் நிலையத்தில் நிறைய பொய் வழக்குகள் போடப்பட்டு நிறைய ஆண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது....... பெண்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் வழக்கு போடலாம் என்ற நிலை உள்ளது


K Raveendiran Nair
ஜூலை 13, 2025 12:40

இவர்களுக்கு 10 ஆண்டுகள் தண்டனை விதிக்க வேண்டும் இப்பொழுது தான் மற்றவர்களுக்கும் அறிவு வரும்


Ramesh Sargam
ஜூலை 13, 2025 12:14

இந்த பெண் காவலர்கள் இருக்கிறார்களே, அவர்கள் ஆண் காவலர்களைவிட மிக மோசம். காவலர் என்றால் மக்களின் பாதுகாவலர் என்றில்லாமல் ஏதோ நாட்டின் சர்வாதிகாரியாக நடந்துகொள்வார்கள். அவர்கள் அடக்கிவைக்கப்படவேண்டும்.


Anantharaman Srinivasan
ஜூலை 13, 2025 11:48

நீதிமன்றங்கள் பிறப்பிக்காத உத்தரவை பிறப்பித்ததாகவும், பிறப்பித்த உத்தரவை நடைமுறை படுத்தாமலும் போலீஸ் மக்களை ஏமாற்றுகிறது.


Kalyanaraman
ஜூலை 13, 2025 09:17

ஏற்கனவே செய்திருக்க வேண்டிய வேலையை செய்வதற்கு நீதிமன்றம் இரண்டு மாத காலம் அவகாசம் கொடுக்கிறது. புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிகளுக்கு என்ன தண்டனை??இதுதான் குற்றங்கள் பெருக மிக முக்கிய காரணம்.. கடும் தண்டனையே கிடையாது ஒரு சாமானியனுக்கு கொடுக்கும் தண்டனையை விட காவலர்களுக்கு 5-6 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் அப்போதுதான் குற்றங்கள் குறையும் நமது ஆண்மையற்ற சட்டங்களும் நீதிமன்றங்களும் குற்றங்கள் பெருகுவதற்கு மிக முக்கிய காரணம்.


Padmasridharan
ஜூலை 13, 2025 09:09

நீதிமன்றத்தின் பெயரை பயன்படுத்திதான் பல காக்கிச்சட்டைகள் சில sections ஐ மக்களிடம் சொல்லி பணத்தை அதிகார பிச்சை எடுக்கின்றனர். இதனால நிறைய குற்றங்களை இவங்களே மறைத்து சம்பளத்துடன் அதிக பணத்தை சேர்க்கின்றனர். வரியில் வராத பணம் இல்லயோ


முக்கிய வீடியோ