உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் சம்பவத்தில் நீதிமன்ற வழிகாட்டுதல் படி நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் உறுதி

கரூர் சம்பவத்தில் நீதிமன்ற வழிகாட்டுதல் படி நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கரூர் சம்பவத்தில் நீதிமன்றம் வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: கரூர் துயரம் குறித்து உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழக அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0mgwpgy2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கரூரில் நடந்த துயரத்தால் நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கிப் போயிருக்கிறோம். தம் அன்புக்குரியோரை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் கண்ணீரையும் கண்டு தவிக்கிறேன். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு தனது விசாரணையைத் தொடங்கும்.

முன்னோடி

இதன் மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநிலத்தின் முதல்வராக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அனைத்து மட்டங்களிலும் பொறுப்பு உறுதி செய்யப்படும். பலவற்றிலும் இந்தியாவுக்கே முன்னோடியான தமிழகம், கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதிலும் நாட்டுக்கு வழிகாட்டும். மாநிலம் முழுவதும் துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரோடும் கலந்தாலோசித்து ஒரு முழுமையான 'நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வடிவமைப்போம். https://x.com/mkstalin/status/1974364450728915223

பெருந்துயரம்

தமிழகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றத்தக்க மாடலாக இது அமையும். துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம். இந்தக் கூட்டு முயற்சியில் அனைவரது யோசனைகள், ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பில்லாதது. நம் மக்களின் இன்னுயிரைக் காக்கவும், இனி இப்படி ஒரு பெருந்துயரம் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே நிகழாமல் தடுக்கவும் ஒன்றிணைவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

பேசும் தமிழன்
அக் 04, 2025 23:12

இவர்கள் அத்தனை பேரும் வரிசை கட்டி பேசுவதை பார்த்தால்..... மக்களுக்கு சந்தேகம் வலுக்கிறது..... இவர்கள் பேசுவது எப்படி இருக்கு என்றால்..... எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளது.


Kasimani Baskaran
அக் 04, 2025 22:01

நீதிமன்றத்துக்கே பிச்சை போட்டு நீதிபதிகளை உருவாக்கி வைத்திருக்கும் பொழுது நீதி எப்படி வேண்டுமென்றாலும் வளையும்.


Ganesan
அக் 04, 2025 18:57

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்தபோது ஏன் பாஜக விசாரணை குழு வரவில்லை? அப்போது ஏன் மத்திய அரசு மௌனமாக இருந்தது? ஆனால் கரூர் சம்பவத்தில் மட்டும் பாஜக உடனே விசாரணை குழுவை அனுப்பியது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இது இரட்டை நிலைப்பாடு என்பதற்கே எடுத்துக்காட்டு


V Venkatachalam
அக் 04, 2025 20:05

பாஜக இரட்டை நிலைப்பாடு. இருக்கட்டுமே.‌அதனால் என்ன ? திருட்டு தீய முகவை ஓட ஓட விரட்டணும். அதுக்கு எவன் இடைஞ்சல் பண்ணினாலும் அவனையும் தூக்கி போட்டு மிதிக்கணும். டமில் நாடு கொள்ளை போய்கிட்டு இருக்கு. அதை ஒழித்து கட்ட என்ன செய்யணுமோ அதை பத்தி பேசுங்க...


Arjun
அக் 04, 2025 16:31

எல்லாமே நீதிமன்ற வழிகாட்டல் படிதான் நடக்கிறதா? அப்படி என்றால் நீதியரசர்கள் உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை யென்று உங்கள் அரசை சாடுவது ஏனோ?


Chandru
அக் 04, 2025 16:05

அப்பா. ஆண்டவன் என்று ஒருவன் ஆயிரம் கண் கொண்டு பார்த்து கொண்டிருக்கிறான் . நீங்கள் செய்யும் அராஜகத்திற்கு முடிவு எவருமே எதிர் பார்த்திருக்க முடியாததாய் இருக்கும். இது சத்தியம் ஸ்டாலின் அப்பா


ஆரூர் ரங்
அக் 04, 2025 14:53

அப்படியே உச்சநீதிமன்றம் கட்டாயமாக்கிய நீட் தீர்ப்பையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.


joe
அக் 04, 2025 14:32

குறுகலான இடத்தில் ரோட் சோ வருமாறு விஜய் கூட்டத்திற்கு அனுமதி கொடுத்துவிட்டு விஜய்யை மாட்டிவிட்டு இப்போது நீதி மன்றத்தை போய் கேளுங்கள் என்கிறார்.இப்படியும் ஊழல் அரசியலா? .


GMM
அக் 04, 2025 14:31

நீதிமன்ற வழிகாட்டுதல் படி ஸ்டாலின் அரசியல் நடவடிக்கை. அறிவாலய வழிகாட்டுதல் படி வழக்கறிஞர் வாத நடவடிக்கை. சென்னை உயர் நீதிமன்ற நிலை மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளை எப்படி மாறுபடுகிறது?. நல்லதோ கெட்டதோ இரட்டை நீதி, நிர்வாகம் நீண்ட காலம் நிலைக்காது. இது மத்திய அரசு, மாநில நிர்வாகத்திற்கும் பொருந்தும்.


joe
அக் 04, 2025 14:29

எல்லாவற்றுக்குமே நீதி மன்றம் என்றால் உங்கள் பதவி மற்றும் அரசியல் எல்லாம் வீண்தான் .சம்பளம் மட்டும் வாங்குவாராம் .


joe
அக் 04, 2025 14:27

நீதி மன்றம் வழி காட்டினாலும் இவரின் அரசு ஊழலை தொடரும் என்பது போலவே பேசுகிறார் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை