உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெளிநாட்டு கார் இறக்குமதி மோசடி: துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு

வெளிநாட்டு கார் இறக்குமதி மோசடி: துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் வைத்துள்ள 2 கார்கள் பூடானில் இருந்து சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் அடிப்படையில், ஆபரேஷன் நும்கூர் சோதனை என்ற பெயரில் நடவடிக்கை எடுத்து வரும் சுங்கத்துறை அதிகாரிகள் அவரின் கார்களை பறிமுதல் செய்தனர்.மேலும், துல்கர் சல்மான் கார் வாங்கியதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு சுங்கத்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால் இந்த கார்களை தான் சட்டப்படி வாங்கி உள்ளதாகவும் அதனை திருப்பித் தர வேண்டும் என்றும் கோரி கேரளா ஐகோர்ட்டில் துல்கர் சல்மான் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதன் பின்னர் 3வது கார் ஒன்றையும் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.இந் நிலையில், சென்னையில் உள்ள அபிராமபுரத்தில் இருக்கும் துல்கர் சல்மான் இல்லத்தில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் இறங்கினர். மொத்தம் 5 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். துல்கரின் சினிமா தயாரிப்பு நிறுவனத்திலும் அவர்கள் சோதனையில் இறங்கி இருக்கின்றனர்.சொகுசு கார்கள் இறக்குமதி விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை