உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்னொரு குத்து தாங்காது சாமி; துரைமுருகன் எனது நண்பர் என்று ஜகா வாங்கினார் நடிகர் ரஜினி!

இன்னொரு குத்து தாங்காது சாமி; துரைமுருகன் எனது நண்பர் என்று ஜகா வாங்கினார் நடிகர் ரஜினி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பல்லுப்போன மூத்த நடிகர்' என்று துரைமுருகன் கிண்டலுக்கு ஆளான நடிகர் ரஜினி, 'அமைச்சர் துரைமுருகன் எனது நண்பர், அவருடன் எனது நட்பு தொடரும்' என்று கூறி, ஜகா வாங்கினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6fqtl4o8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மூத்த அமைச்சர்களை வைத்து, தமிழக அரசை ஸ்டாலின் அரசு நடத்துவது பற்றி, 2 நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த விழாவில், நடிகர் ரஜினி கிண்டலாக பேசினார்.'ஒரு வகுப்பில் புதிய மாணவர்கள் வந்தால் எளிதில் சமாளித்து விடலாம். பழைய மாணவர்கள் இருந்தால் சமாளிப்பது கஷ்டம். பாஸ் ஆகி, ரேங்க் வாங்கிக்கொண்டும் போக மாட்டேன் என்று கூறிக்கொண்டு வகுப்பில் இருக்கும் பழைய மாணவர்கள்' என்று ரஜினி பேசினார்.

துரைமுருகன் கிண்டல்

அதுவும் குறிப்பாக, 'அதிலும், துரைமுருகன் இருக்கிறார்; அவர் கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர்' என்றெல்லாம், கிண்டலாகப் பேசினார் ரஜினி. அதற்கு மறுநாள் பதிலளித்த அமைச்சர் துரைமுகன், தன் பாணியில் ரஜினியை கிண்டல் செய்தார்.'மூத்த நடிகர்கள் பல்லுப்போய், வயசாகி, தாடி வளர்த்துக்கொண்டும் நடிப்பதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை' என்று கூறி விட்டார். துரைமுருகன் கிண்டல், இணையத்தில் வைரலாக பரவியது.

துரைமுருகன் நண்பர்

இது பற்றி இன்று நடிகர் ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், 'துரைமுருகன் எனது நீண்ட கால நண்பர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். என்ன சொன்னாலும் தப்பு கிடையாது. துரைமுருகன் உடனான எனது நட்பு எப்போதும் போல தொடரும்' என்று பதிலளித்து விட்டுச் சென்றார். மேலும், . கட்சி கொடியை அறிமுகப்படுத்திய விஜய்க்கு எனது வாழ்த்துக்கள் என ரஜினி தெரிவித்தார்.

துரைமுருகன் பதில்

நடிகர் ரஜினி பதில் குறித்து, அமைச்சர் துரைமுருகன், 'நடிகர் ரஜினி பற்றி நகைச்சுவையாக பேசினேன். நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம். ரஜினியும், நானும் எப்போதும் நண்பர்களாவே இருப்போம்' என பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Muthusubramanian
ஆக 27, 2024 16:05

நாம் ஒருவரை ஆள்காட்டி விரலால் அவர் மீது பழி சொல்லி சுட்டிக்காட்டும் போது மூன்று விரல்கள் நம்மை நோக்கி உள்ளன என்பதை உணர வேண்டும். சினிமா நடிகர்கள் பல் விழுந்த பின்னரும் நடிக்கிறார்கள் அது போல அரசியல் வாதிகளும் முதுமை அடைந்த பின்னரும். இளவயதினருக்கு இடமளிக்காமல் தள்ளாடும் வயது வரை பதவியை விட்டு விலாகமல் தானே இருக்கின்றனர். துரைமுருகனுக்கே இது தெரியாதா என்ன..


Mani . V
ஆக 27, 2024 14:59

இந்த மானம் கெட்ட நாரப் பிழைப்பிற்கு பேசாமலேயே இருந்து தொலைத்திருக்கலாமே.


Giri V S
ஆக 27, 2024 11:45

ஆக மொத்தம் எல்லாருமே காசுக்காத்தான், அது நரகல்ல விழுந்த இருந்தாலும் பொறுக்கி, இருக்கிறார்கள். அப்பறம் என்ன நண்பன், விரோதி


Joy Kizha
ஆக 27, 2024 05:39

அம்மா குத்து கும்மா குத்து அடி வாங்கி அப்படி அடித்து உள்ளார் ரஜினி. இந்த அழகுல கமலை கேலி செய்வார்கள் இந்த ரசிகர்கள்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 26, 2024 21:13

தான் துணை முதல்வர் ஆவதை துரைமுருகன் தடுக்கிறார் என்று ஊத்தியநிதி ரஜனியை தூண்டிவிட எஜமான விசுவாசத்தில் ரஜனி பேச அசிங்க பட்டதுதான் மிச்சம் .....


S.jayaram
ஆக 26, 2024 20:15

ரஜினி அவர் விழாவிற்கு வந்தால் அந்த வேலையை மட்டும் பார்க்கணும், அதைவிட்டு அறிவுரை வழங்கி மற்றவரின் அவதூறுக்கு ஆளாக அவசியம்


M Ramachandran
ஆக 26, 2024 19:34

துறை முருகன் அவர்கள் அனுபவம் மிக்க பழுத்த அரசியல்வாதி. MGR றால் வளர்க்க பட்டு கருணாநிதி அவர்களால் அரசியல் அனுபவம் பெட்ரவர். இவரிடம் ரஜினி ஏடு கொடுப்பது நடவாது அதனால் ஹான் ரஜினி பணித்து போனார்


Ramprasad C Gupta (Vasavi prasad)
ஆக 27, 2024 07:34

தமிழை பதிவிடும்போது இலக்கண பிழை இல்லாமல் பதிவிடவும்.


ஆரூர் ரங்
ஆக 26, 2024 18:28

ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நாடக உரையாடல்கள்தான். ஒரே நல்ல விஷயம் இருவரும் துருப்புசீட்டைப் பார்த்து பேசவில்லை.


Vasudeva
ஆக 26, 2024 17:46

ஸ்க்ரிப்ட் ல இருந்ததை தானே பேசினார்,அதுக்கு போய் இந்த மரண அடியா,மறுபடியும் ட்ரீட்மென்ட் எடுக்க வெச்சுருவாரு போல


RIfay
ஆக 26, 2024 17:16

வேற வழி நண்பர்கள் என்று சொல்லி பல்லிப்போம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை