உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

சென்னை:பிரபல நகைச்சவை நடிகர் ரோபோ சங்கர், 46, உடல் நலக் குறைவால் காலமானார். சின்னத்திரையில், காமெடி பேச்சாளராக ஜொலித்தவர் ரோபோ சங்கர். சினிமாவிலும் காமெடி நடிகராக உயர்ந்தார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த இவர், மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தார். இதையடுத்து, திரைப்படங்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். கடந்த சில தினங்களாக உணவுக்குழாய் மற்றும் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், நேற்று இரவு பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் சினிமாவில் விஜய், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உட்பட பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது மனைவி ப்ரியங்காவும் சின்னத்திரை நடிகையாக உள்ளார். இவர்களின் மகள் இந்திரஜா, 'பிகில்' படத்தில் விஜயுடன் நடித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில், ரோபோ சங்கரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட உள்ளது. அவரது மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sureshkumar
செப் 19, 2025 09:45

RIP


Vasan
செப் 19, 2025 07:47

RIP. திரையுலகில் குறுகிய காலத்தில் பெரும்பெயர் பெற்றவர். "வேலைன்னு வந்துட்டால் வெள்ளைக்காரன்" படத்தில் அவரது காமெடி மிக அற்புதம். அனைவரையும் சிரிக்க செய்தார், ஆனால் இந்த சிறிய வயதிலேயே இறைவன் திருவடி சென்று அடைந்துள்ளார். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.


மாபாதகன்
செப் 19, 2025 10:34

குடி குடியை கெடுக்கும் குடி உடல் நலத்திற்கு தீங்கானது ?? குடித்து விட்டு வாகனங்களை இயக்காதீர் ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை