உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் யோசித்து செயல்பட நடிகர் சிவராஜ் குமார் அட்வைஸ்

விஜய் யோசித்து செயல்பட நடிகர் சிவராஜ் குமார் அட்வைஸ்

துாத்துக்குடி: கன்னட நடிகர் சிவராஜ்குமார், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று தன் மனைவி கீதாவுடன் சுவாமி தரிசனம் செய்தார். பின், அவர் அளித்த பேட்டி: திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு வர வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. தற்போது முதல்முறையாக இங்கு தரிசனம் செய்தேன். தற்போது, ரஜினிகாந்துடன் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறேன். தமிழக அரசியல் பற்றி எனக்கு பெரிய அளவில் தெரியாது. முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோரை நன்றாக தெரியும். விஜய், அரசியலுக்கு வந்தபோது எனக்கு மிகவும் பிடித்தது. சாதாரண மனிதனாக, கரூர் துயர சம்பவம், எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அடுத்து விஜய் எந்த மாதிரியான நகர்வு எடுத்து வைத்தாலும் யோசித்து நன்றாக நிதானமாக எடுத்து வைக்க வேண்டும். ஒரு நடிகராகவும், ஒரு சகோதரராகவும் இதை கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை