மேலும் செய்திகள்
அரசியல் நடிகர் விஜய்: பா.ஜ., விமர்சனம்
24-Aug-2025
மதுரை : ''அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் மதிக்க வேண்டும்'' என முதல்வர் ஸ்டாலினை விஜய் விமர்சித்தது குறித்து நடிகர் சூரி கருத்து தெரிவித்தார். தனது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அவர்சுவாமி தரிசனம் செய்தார். பின் அவர் கூறியதாவது: இன்று ராமனான எனக்கும், லட்சுமணான என் தம்பிக்கும் பிறந்தநாள். ராமன் என்ற பெயர் சூரியாக மாறிவிட்டது. 'மாமன்' படத்திற்கு பின் தற்போதுமீனவர் சம்பந்தப்பட்ட கதைக் களத்தில் 'மண்டாடி' படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடலில் நடக்கும் வீர விளையாட்டு குறித்த படம்.எனக்கு வாய்ப்பு கொடுத்தது போல தற்போதுள்ள காமெடி நடிகர்கள்அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லோரும் வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் மதிக்க வேண்டும் என்பது முக்கியம். இன்று சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியலுக்குச் சென்ற த.வெ.க., தலைவர் விஜய், திரும்ப சினிமாவுக்கு வரலாம். அது அவரது விருப்பம் என்றார்.
24-Aug-2025