உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மருத்துவ சோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதையடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் சென்னையில் கைது செய்யப்பட்டார்.சென்னை, நுங்கம்பாக்கத்தில் கடந்த மாதம் தனியார் மதுபான விடுதி ஒன்றில் அடிதடியில் ஈடுபட்டதாக அ.தி.மு.க., ஐடி விங் நிர்வாகியான மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத், மற்றொரு அ.தி.மு.க., பிரமுகர் அஜய் வாண்டையார், பிரபல ரவுடி சுனாமி சேதுபதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wcosx84p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன் பிறகு அ.தி.மு.க., ஐ.டி விங் நிர்வாகியான பிரசாத் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தார் என அடுத்தடுத்து போலீசில் புகார்கள் கொடுக்கப்பட்டன. இது தொடர்பாக நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வாக்குமூலம்மேலும், பிரசாத், போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அவரிடம் யாரிடம் போதைப்பொருள் வாங்கினார், யாருக்கெல்லாம் சப்ளை செய்தார் என்றெல்லாம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொக்கைன் சப்ளை வழக்கில் கைதான பிரதீப் குமாரிடமும் விசாரணை நடத்தினர்.மருத்துவ பரிசோதனைஅப்போது பிரதீப் மூலமாக ஸ்ரீகாந்துக்கு பிரசாத் போதைப்பொருள் வழங்கியதாக வாக்குமூலம் அளித்தனர். இதற்கிடையே கைதான அதிமுக ஐ.டி விங் நிர்வாகி பிரசாத்தை அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கினர். இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த்க்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். பின்னர், சென்னை நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் துணை கமிஷனர் ஜெயச்சந்திரன், ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.

ரூ.12 ஆயிரம்

ஒரு கிராம் கொக்கைன் போதைப்பொருளை ரூ.12 ஆயிரம் கொடுத்து ஸ்ரீகாந்த் வாங்கியதாக கூறப்படுகிறது. ஸ்ரீகாந்தை வைத்து 'தீக்கிரை' எனும் படத்தை மூன்று தயாரிப்பாளர்களுள் ஒருவராக பிரசாத் தயாரித்து வந்துள்ளார். அத்திரைப்படம் தொடர்பான பார்ட்டியில் பிரசாத், ஸ்ரீகாந்துக்கு கொகைன் வழங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தாமரை மலர்கிறது
ஜூன் 24, 2025 01:57

அரசியல் பழிவாங்கல். திமுக ஆதரவான நடிகர்கள் போதைப்பொருளுடன் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கும்போது, ஸ்ரீகாந்த் கைது ஏன்?


Jay
ஜூன் 23, 2025 21:37

இவன் சிக்கன் மட்டுமல்ல போதை வஸ்த்துவையும் சாப்பிடும், அயோக்கியன்.


Dinesh Pandian
ஜூன் 23, 2025 21:10

அவரிடம் போதை பொருள் கைப்பற்ற பட்டதா ?


m.arunachalam
ஜூன் 23, 2025 20:26

தற்போதைய நிலையில் 40 சதவீதத்திற்கு மேல் ஏதோ ஒரு பெரிய குற்றத்தில் தொடர்பு உள்ளவர்களாக உள்ளனர். ஆனால் நாம் வளர்ந்த நாடு என்ற நிலையை அடைய விரும்புகிறோம் . அருகதை இல்லாத பெருமைக்கு ஆசைப்படுவதின் விளைவு. தெளிதல் நலம்.


RRR
ஜூன் 23, 2025 19:34

திராவிட போதை மாடல் அரசின் லட்சணம் இதுதான்... சினிமா நடிகர் பலிகடா...


Ramesh Sargam
ஜூன் 23, 2025 19:27

திரையுலகில் உள்ளவர்கள், டிவி சீரியல் உலகில் உள்ளவர்கள் வருடத்துக்கு ஒருமுறையாவது கண்டிப்பாக போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்று சோதனை செய்யப்படவேண்டும். அப்படி செய்தால் பலர் சிக்குவார்கள். இன்றுள்ள பல இளைய தலைமுறையினர் அந்த பிரபலன்களால் மிகவும் சீரழிந்துள்ளனர் என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.


Balasubramanian
ஜூன் 23, 2025 18:30

பிரபல நடிகரை கைது செய்தால் தான் அந்த செய்தி பிரபலமாகும் - தாங்கள் போதைப் பொருள் தடுப்பில் ஈடுபட்டதாக மக்கள் முன் மார் தட்டிக் கொள்ள முடியும்? யார் அந்த சார் - என்று யாரும் கேட்காமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்!


Sudha
ஜூன் 23, 2025 17:33

ஒரு அதிமுக ஒரு பிஜேபி அப்புறம் முரசொலியில் உடன்பிறப்பே கடிதம், மற்றபடி எங்கிருந்து வருகிறது எங்கெங்கு விற்பனை யாகிறது இதெல்லாம் தேவையில்லாத விஷயங்கள்


V K
ஜூன் 23, 2025 17:00

திரை உலகமே ஒரு விதமான போதை அடிமையில் இருக்கு


Nathan
ஜூன் 23, 2025 16:39

HOW A PERSON WHO USES NARCOTIC DRUGS CAN BE ARRESTED UNLESS HE IS FOUND IN POSSESSION OF NARCOTICS IN EXCESS QUANTITY OR HE IS PEDDLING DRUGS WITH INTENTION TO SELL AND DISTRIBUTE.


சமீபத்திய செய்தி