உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதோ... நாங்க ரெடி! அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கும் த.வெ.க.

இதோ... நாங்க ரெடி! அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கும் த.வெ.க.

சென்னை: நாளை (மார்ச் 5) நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நடிகர் விஜயின் த.வெ.க. கலந்து கொள்கிறது.லோக்சபா தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது தமிழகத்தில் தற்போது உள்ள லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்பது தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.மறுசீரமைப்பின் போது ஏற்கனவே இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக ஏற்கனவே தெரிவித்துவிட்டது. அதே நேரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க தமிழக அரசு அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.சென்னையில் நாளை (மார்ச் 5) இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. மொத்தம் 45 அரசியல் கட்சிகளுக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந் நிலையில், இந்த கூட்டத்தில் நடிகர் விஜயின் த.வெ.க., பங்கேற்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான அறிவிப்பை அக்கட்சி வெளியிட்டு உள்ளது. த.வெ.க., சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.நடிகர் விஜயின் மக்கள் இயக்கம், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியாக பரிணமளித்து ஓராண்டு கடந்துள்ள சூழலில் அக்கட்சி பங்கேற்கும் முதல் அரசியல் நடவடிக்கை மற்றும் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பதால் ரசிகர்கள் மற்றும் த.வெ.க., தொண்டர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. த.வெ.க., தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் என்ன விதமான கருத்துகள், ஆலோசனைகள் முன் வைக்கப்பட உள்ளன என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை. இதனிடையே, அ.ம.மு.க., சார்பில் மாஜி அமைச்சர் செந்தமிழன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Selvarajan Gopalakrishnan
மார் 05, 2025 00:23

தினமலர் தயவு செய்து விஜய் பற்றி செய்தி போடாதீங்க.. ஒரு பத்திரிக்கையாளர் மீட்டிங் வரச்சொல்லுங்க முதலில், அப்புறம் அவர் அணைத்து கட்சி கூட்டத்துக்கு போகட்டும்.


Visu
மார் 04, 2025 23:27

அடியேய்னு கூப்பிட. பொண்டாட்டி இல்லையாம் ஆறாவது பிள்ளைக்கு பேரு வைச்சானாம் கதையால்ல இருக்கு


தாமரை மலர்கிறது
மார் 04, 2025 20:16

இன்னொரு திருட்டு திராவிட கொள்கை கொண்ட கட்சி தான் தவக்களை வித்தை கட்சி.


Shivam
மார் 04, 2025 22:51

நீ ஒன்னும் மலர்ர மாதிரி தெரியலையே


Prasath
மார் 04, 2025 19:52

A team B டீம்மை சந்திக்கபோகுது இதுல என்ன அதிசியம் இருக்கு கழக கொள்கையும் விஜய் ஜோசப் கொள்கையும் ஒன்னு திமுக எதிரா பிரியர ஓட்டை ஜோசப் பக்கம் மடை மாத ஆரமிக்கபட்டது


அரவழகன்
மார் 04, 2025 18:25

.. மொழிகளை கற்பது அவசியம்...தெரியுமா...?


Shivam
மார் 04, 2025 22:56

அப்ப தான் ஜீ பே வேலை செய்யுமா


srinivasan
மார் 04, 2025 17:55

திருட்டு திமுக கூட்டத்தில் பங்கேற்று நாளை அவர்களின் ஊழலிலும் பங்கெடுக்க வாழ்த்துகள்.


HoneyBee
மார் 04, 2025 16:40

என்னடா இப்படி உருட்டற... நீ எதையும் யோசிச்சு செய்ய மாட்டியா ...


Laddoo
மார் 04, 2025 16:28

கேரவானில் மீட்டிங் ஆ


பாரத புதல்வன்
மார் 04, 2025 15:53

ஜோசப்பு நீ அதுக்கு ஆக மாட்ட.....


V K
மார் 04, 2025 15:53

ரெடி யாம் பா அந்த சீட்டுக்கு பிரியாணி பார்சல்


புதிய வீடியோ