உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டம்: மா.கம்யூ., பாலகிருஷ்ணன் வேதனை

நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டம்: மா.கம்யூ., பாலகிருஷ்ணன் வேதனை

விழுப்புரம்: 'நடிகர் விஜய்க்கு கூடும் மக்கள் கூட்டத்தை நினைத்தால், வேதனையாக இருக்கிறது' என மா.கம்யூ., அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் பேசினார். விழுப்புரத்தில் வி.சி., கட்சி சார்பில் நேற்று நடந்த பஞ்சமி நிலங்களை மீட்போம் கருத்தரங்க கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் அரசியல் தேவைக்கு ஏற்ப, கம்யூ., மற்றும் வி.சி., கட்சிகள் கூட்டணிகளை மாறி, மாறி அமைக்கிறது என்றாலும், ஜாதிய ஒடுக்குமுறைகள், பஞ்சமி நிலம் மீட்பு போன்ற மக்கள் பிரச்னைக்கு ஒன்றிணைந்து குரல் எழுப்பி வருகிறோம். இப்போது, புதிதாக வந்துள்ள அரசியல் தலைவருக்கு, இது போன்ற ஜாதிய ஒடுக்குமுறைகள், நில உரிமை மீட்பு பிரச்னைகள் பற்றியெல்லாம் தெரியாது. ஆனால், அவர் வரும்போது, எதற்கென்றே தெரியாமல் அவரை பார்க்க மக்கள் திரளும், சமூக அவலம் உருவாகியுள்ளது. அவரது, கூட்டத்தின்போது இறந்த 41 பேரின் குடும்பத்தை நேரில் சென்று பார்க்கவில்லை. ஆறுதல் சொல்லவில்லை. வடமாநிலங்களில் தான், திருவிழா கூட்டங்களில் திரண்டு, உயிர் பலிகள் நிகழ்வது நடந்து வந்தது. தற்போது, தமிழகத்திலும் அரசியல் கூட்டத்தால் அந்தநிலை வந்துவிட்டது. இறந்தவர்களின் குடும்பத்தினரை அழைத்து, ஆறுதல் கூறும் அரசியல் பண்பாடும் மாறியுள்ளது. கூட்டத்தில் சிக்கி என் பிள்ளை இறந்தாலும் பரவாயில்லை, என் தலைவரை பார்த்தால் போதும் என கூறும் அளவிற்கு, தமிழக மக்களின் மனநிலை கெட்டுள்ளது. இவற்றுக்கெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார். கூட்டத்தில், தெற்கு மாவட்ட செயலாளர் பெரியார் வரவேற்றார். கம்யூ., மாவட்ட செயலர்கள் சுப்ரமணியன், சவுரிராஜன், சரவணன் முன்னிலை வகித்தனர். வி.சி., பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி., தலைமை தாங்கினார். இந்திய கம்யூ., மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார். நகர செயலாளர் இரணியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

கல்யாணராமன் சு.
அக் 29, 2025 18:45

அவர் வரும்போது, எதற்கென்றே தெரியாமல் அவரை பார்க்க மக்கள் திரளும், சமூக அவலம் உருவாகியுள்ளது. ... அப்படி அவரை, ஒரு சினிமா நடிகனை, பார்க்க கூட்டம் வருதுன்னா, உங்க எஜமானர் கட்சி எந்த அழகுல ஆட்சி செய்யுதுன்னு புரிஞ்சுக்கிங்க ...இன்னொண்ணும் உங்களை கேக்கணும் . .. மக்கள் பிரச்சினைக்கு போராடிக்கொண்டிருக்கும்போது , அதுலே கவனம் செலுத்தாமே சினிமா விமரிசனம் போடற உங்க "அப்பா" முதலமைச்சரை பத்தி என்ன சொல்லப்போறீங்க ?


கல்யாணராமன் சு.
அக் 29, 2025 18:40

வடமாநிலங்களில் தான், திருவிழா கூட்டங்களில் திரண்டு, உயிர் பலிகள் நிகழ்வது நடந்து வந்தது. .. கரெட்டுன்னே வெச்சுப்போம் . ... இங்கே என்ன நடக்குது . ... கள்ளச்சாராயத்தை குடிச்சு அதை விட கூட உயிர்கள் பலியாவுதே, அதை பத்தி தோழர் பாலகிருஷ்ணன் என்ன சொல்லுவார் ?


கல்யாணராமன் சு.
அக் 29, 2025 18:34

ஜாதிய ஒடுக்குமுறைகள், பஞ்சமி நிலம் மீட்பு போன்ற மக்கள் பிரச்னைக்கு ஒன்றிணைந்து குரல் எழுப்பி வருகிறோம் .. எத்தனை இடத்திலே பஞ்சமி நிலங்களை மீட்டிருக்கீங்க ? எத்தனை இடத்திலே ஜாதிய ஒடுக்குமுறைகளை களைஞ்சிருக்கீங்க ? அந்த கோவிலுக்குள்ளே போன பட்டியலின இளைஞனை கெட்ட வார்த்தைகளில் திட்டிய திருடர்கள் முன்னேற்ற கழக பிரமுகர் என்ற ரௌடியை எதிர்த்து என்ன செய்தீர்கள் ? இன்னும் ஒரு பெரிய லிஸ்டே இருக்கு நான் மறக்கறதுக்கு முன்னாடி, அந்த முரசொலி அலுவலகம் கட்டப்பட்ட பஞ்சமி நிலம் என்னாச்சு ? மீட்டுட்டீங்களா ?


Jagan (Proud Sangi )
அக் 29, 2025 18:33

தகரம் கண்டுபிடிக்கும் முன் உண்டியல் கண்டுபிடித்தவர்கள் தோழர்கள் என்று ஜெயா சொன்னார். இப்போ மொத்தமா ஒரே இடத்துல டேரா. இதுல பொறாமை வேற ஹா ஹா ஹா


கல்யாணராமன் சு.
அக் 29, 2025 18:28

தமிழகத்தில் அரசியல் தேவைக்கு ஏற்ப, கம்யூ., மற்றும் வி.சி., கட்சிகள் கூட்டணிகளை மாறி, மாறி அமைக்கிறது ... அது என்ன அரசியல் தேவை ? பணமா? பதவியா? சத்தியமாக கொள்கை கிடையாது, ஏனென்றால் விசிகவுக்கும் கம்மிகளுக்கும் கொள்கைகள் என்ன என்பது அவர்களுக்கே தெரியாது . ...


Viswanathan B N
அக் 29, 2025 17:20

இவர் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி கவலை படுகிறார். ஆனால் இவர் கூட்டணி தலைவர் அந்த சினிமா துறையில் ஆர்வமாக இருக்கிறார். அடை மழையிலும் மாரி செல்வராஜ் படத்திற்கு விஜயம் செய்து வாழ்த்துகிறார்


sundarsvpr
அக் 29, 2025 16:18

திருக்கோயில்களில் அந்தரங்க சுத்தியுடன் அர்ச்சகர்கள் ஸ்வாமிக்கு அலங்காரம் ஆராதனை கைங்கரியம் செய்கின்றனர். சுவாமி பல்லக்கில் எழுந்தரும்போது உடன் வருவது மொத்தம் பத்துபேர். அர்ச்சகர் துணை அர்ச்சகர் பல்லாக்கு தூக்கும் நாலு பேர் சாமரம் வீசும் இரண்டு பேர் பந்தம் பிடிக்கும் ஒருவர். ஆனால் நடிகர் விஜய் மன்னிக்கவும் இவர் வேறுமதத்தவர் ரஜினி சுவாமி கும்பிட வந்தால் ஆயிர கணக்கில் மக்கள்.மக்கள் ரசனை மாற்ற அரசியல்வாதிகள் ஏன் முயற்சிப்பதில்லை? அரசியல்வாதிகள் 90% வேடதாரிகள். நடிகர் விஜய் அரசியல்வாரியாய் மாறிவிட்டார்.


Vasan
அக் 29, 2025 15:53

ஆனால் உங்கள் கூட்டத்தில் இடிபாடு நடக்க வாய்ப்பேயில்லை. கூட்டத்திற்கு வந்த ஒரு சில பேரும் பத்திரமாக வீடு சென்று இருப்பார்கள். இது எங்களுக்கு ஆனந்தமாய் உள்ளது.


Akash
அக் 29, 2025 15:44

Burnt stink somewhere


vbs manian
அக் 29, 2025 15:08

வேதனை இல்லை பொறாமை.