வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Red Giant Moviesக்கு (குடும்பத்துக்கு) கப்பம் கட்ட மறுத்தார்களோ? மெத்தபெட்டபோமையின் supplier அமீர், மற்றும் இன்னொரு பிரபல நபர் குற்றமற்றவரோ?
சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவரும் ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்த, அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகி பிரசாத், 33, நடிகர், நடிகையருக்கு 'கோகைன்' சப்ளை செய்துள்ளார்; நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பண்ணை வீடுகளில் கோகைன் விருந்து நடத்தி, அவர்களை போதையில் மிதக்க விட்டார். அவர்களுடன் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோருக்கும் தொடர்பு ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இருவரும் ஜாமின் கோரி மனு அளித்திருந்தனர்.இந்த மனு போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.விசாரணையில்,ஸ்ரீகாந்த் தரப்பில் போதைப்பொருள் பயன்படுத்துவதற்கும், வைத்திருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது என வாதிடப்பட்டது.கிருஷ்ணா தரப்பில், மருத்துவ பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது உறுதியாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டது.இருவருக்கும் ஜாமின் வழங்கக் கூடாது என்று போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Red Giant Moviesக்கு (குடும்பத்துக்கு) கப்பம் கட்ட மறுத்தார்களோ? மெத்தபெட்டபோமையின் supplier அமீர், மற்றும் இன்னொரு பிரபல நபர் குற்றமற்றவரோ?