உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருணாநிதி கனவு இல்லம் திட்டத்திற்கு கூடுதலாக ரூ. 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு; அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

கருணாநிதி கனவு இல்லம் திட்டத்திற்கு கூடுதலாக ரூ. 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு; அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: 'கருணாநிதியின் கனவு இல்லம் திட்டத்திற்கு ஏற்கனவே ரூ.995.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், மேலும் ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை: கருணாநிதியின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3,50,000/- வீதம் மொத்தம் ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கிராமப்புற பகுதிகளில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசை வீடுகள் உள்ளதாக 'அனைவருக்கும் வீடு' என்ற கணக்கெடுப்பின் வழியாக கண்டறியப்பட்டதன் அடிப்படையில் 'குடிசையில்லா தமிழகம்' என்ற இலக்கினை அடையும் பொருட்டு, எதிர்வரும் 2030ம் ஆண்டிற்குள் ஊரக பகுதிகளில் 6 வருடங்களில் 8 லட்சம் வீடுகள் புதியதாக கட்டித்தர அறிவிப்பு வெளியிடப்பட்டது. கருணாநிதியின் கனவு இல்லம் திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒரு லட்சம் வீடுகளும் விரைவாக கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே ரூ.995.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், மேலும் ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வீடுகளின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு மேலும் ரூ.400 கோடி விடுவித்து ஆணை வழங்கியுள்ளது. தற்போது வரப்பெற்றுள்ள ரூ.400 கோடியும் சேர்ந்து மொத்தம் ரூ.1451.34 கோடி பெறப்பட்டு கட்டுமான நிலைக்கு ஏற்ப பயனாளிகளின் வங்கிகணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது. இந்நிதியாண்டிற்குள் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sankaranarayanan
டிச 18, 2024 12:51

கனவிலே கூட கருணாதி அவர்களின் இல்லம் கட்டப்படுமா என்ன இது விசித்திரமாகவே உள்ளது பிறகு இன்னும் கனவிலே என்னென்ன கட்ட இருக்கின்றன் என்று ஒரு லிஸ்டு கொடுத்தால் மக்களுக்கு உறுதுணையாகவே இருக்கும் முழித்துக்கொண்டிருக்கும்போது நிகழாத நடத்தப்படாத நிகழ்ச்சிகளை எல்லாம் கனவிலே காட்டுவார்களாம் நம்புங்கள் மக்களே நம்புங்கள்


xyzabc
டிச 18, 2024 11:46

பிரதமர் முன்பே செயல் படுத்திய திட்டம். ஸ்டிக்கர் Sticker போட்டாச்சு


GoK
டிச 18, 2024 11:46

அவன் கனவு மக்களுக்கு தெரிந்தால் அவன் மக்கள் கதி அதோகதிதான்


angbu ganesh
டிச 18, 2024 11:29

கனவு இல்லாமதானே கோபால புரத்துல இறுக்கு ஏம்பா நாங்க நாளெல்லாம் ஒழைக்கரோம் ஒரு பத்து பைசா சேக்க முடியல ஆனா நீங்களும் உங்கள் குடும்பமும் வியவர்வ சிந்தி உழைக்கலை ஆனா ac சார் என்ன bunglaow என்ன ம்ம் எல்லாத்துக்கும் ....


M Ramachandran
டிச 18, 2024 11:23

மக்கள் வெள்ளத்தால் பாதிப்படைய்ந்து ஆல்லாடும் போது உபயோகமுள்ள செத்தவனாய் வைத்து திட்டம் போடு பவன் கொடுங்கோலர்களை நினைவு படுத்துகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை