உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் தம்பிக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை

அமைச்சர் தம்பிக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை

சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை, கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.இவ்வழக்கில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு, அமலாக்கத் துறை பலமுறை, 'சம்மன்' அனுப்பியது; அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் அசோக்குமார், அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் சண்முகம் ஆகியோருக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.அதில், அசோக்குமார் தவிர்த்து, கூடுதலாக 10க்கும் மேற்பட்டோர் பெயர்கள் இடம்பெற்றுஉள்ளதாக தெரிகிறது.செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர். இந்த வழக்கில், 150 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி சி.சஞ்சய்பாபா, வழக்கு விசாரணையை பிப்., 20ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !