உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சி - மஸ்கட் இடையே கூடுதல் விமான சேவை

திருச்சி - மஸ்கட் இடையே கூடுதல் விமான சேவை

சென்னை: திருச்சி - மஸ்கட் இடையே கூடுதல் விமான சேவையை, ஜனவரி 6ம் தேதி, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனம் துவங்க உள்ளது.திருச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, ஏராளமானோர் வேலைக்காக ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட் செல்கின்றனர். திருச்சியில் இருந்து மஸ்கட்டிற்கு, இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள், விமான சேவையை வழங்கி வருகின்றன. எனினும், வாரம் முழுதும் இல்லாமல், வாரத்தில் சில நாட்கள் மட்டுமே விமான சேவை உள்ளது. அதனால் பயணியர், சென்னை போன்ற விமான நிலையங்களுக்கு சென்று, மஸ்கட் செல்ல வேண்டியுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், ஏற்கனவே திருச்சி - மஸ்கட் இடையே புதன் கிழமை மட்டும் நேரடி விமான சேவையை வழங்கி வந்தது. இந்நிலையில், ஜனவரி 6ம் தேதி முதல் கூடுதலாக திங்கள் கிழமையும் நேரடி சேவையை வழங்க உள்ளது. திருச்சியில் இருந்து திங்கள் கிழமை இரவு 6:00 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 8:40 மணிக்கு மஸ்கட் சென்றடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை