மேலும் செய்திகள்
வந்தே பாரத் ரயில்களில் உள்ளூர் உணவு
1 hour(s) ago
சமூக நீதி விடுதிகளில் கள ஆய்வு செய்ய உத்தரவு
1 hour(s) ago
மருத்துவ கல்லுாரிகள் மத்திய அரசு அனுமதி தருமா?
1 hour(s) ago
மதுரை:மதுரை விமான நிலையத்தில் பயணியரை இறக்கி விட, ஏற்றிச் செல்ல கார் உள்ளிட்ட வாகனங்கள் வருகின்றன.வாகனங்களின் வருகையை பதிவு செய்து உள்ளே செல்ல அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. பின், வெளியேறும்போது எவ்வளவு நேரம் கார் நின்றதோ அதற்கான கட்டணத்தை வசூலிப்பது வழக்கம். 'பயணியரை இறக்கி விட்டு, 10 நிமிடத்திற்குள் வெளியேறி விட்டால் கட்டணம் கிடையாது. ஒரு மணி நேரத்திற்கு மேல், 2 மடங்கு கூடுதல் கட்டணம், முறைகேடாக வசூலிக்கப்படுகிறது' என, டிரைவர்கள் குற்றஞ்சாட்டினர். இதுகுறித்து செய்தி வெளியானது. எம்.பி.,க்கள் மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் ஆகியோர் விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் கவனத்திற்கு, இந்த விவகாரத்தை எடுத்து சென்றனர்.இந்த விவகாரம், சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது. முதுநிலை வர்த்தக மேலாளர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கட்டணம் வசூலிக்க ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தின் பணியாளர், கூடுதல் கட்டணம் கேட்டது உறுதியானது. இதைதொடர்ந்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago