உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு: அமித் ஷாவிடம் ஆதீனம் கோரிக்கை

இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு: அமித் ஷாவிடம் ஆதீனம் கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும்; கச்சத்தீவை மீட்டு இந்திய மீனவர்கள் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மதுரை ஆதீனம் மனு கொடுத்தார்.மதுரை ஒத்தக்கடையில், பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த அமித் ஷா, முன்னதாக நேற்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தார். வரும் வழியில் மடத்தில் காத்திருந்த மதுரை ஆதீனத்தை பார்த்ததும், காரை விட்டு அமித் ஷா இறங்கினார். அவருக்கு ஆதீனம், காவி நிற சால்வை அளித்தார். பின், மனு ஒன்றையும் அமித் ஷாவிடம் வழங்கினார். அதை பெற்றுக்கொண்ட அமித் ஷா நன்றி தெரிவித்து கோவிலுக்கு சென்றார்.இதையடுத்து ஆதீனம் கூறுகையில், “அமித் ஷாவை நேரில் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும். ''இந்திய மீனவர்கள் பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும் என கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தேன். நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்,” என்றார்.பிரதமர் மோடி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த போதும், மதுரை ஆதீனம் தன் மடத்திற்கு வெளியே காத்திருந்து, அவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Indian
ஜூன் 09, 2025 11:11

நடந்தது மாதிரி தான் ??


Madras Madra
ஜூன் 09, 2025 11:10

மசூதிகளும் இமாம்களும் ப்பாதிரிகளும் அரசியலில் தலை இட்டு ஆதீனம் ஏன் தலை இட கூடாது ?


SP
ஜூன் 09, 2025 10:46

தமிழக ஆதீனங்கள் தமிழகத்தில் உள்ள கோயில்களை சீர்படுத்துவதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அதை விடுத்து அடுத்த நாட்டு அரசியலில் எல்லாம் தலையிடக்கூடாது.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 09, 2025 10:31

முதலில் இந்த திமுக கும்பலிடமிருந்து மதுரை ஆதீன மடத்தை காப்பாற்றவேண்டும்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 09, 2025 10:29

இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு அமைய வேண்டுமென்றால் விடியல் அப்பா வேஷ்டி கட்டிக்கொண்டு இருபது நிமிஷம் உண்ணாவிரதம் இருக்கவேண்டும்


புரொடஸ்டர்
ஜூன் 09, 2025 09:19

பிறவி அறிவிலிகள் சந்தித்தால் இதுபோல நிகழும்.


துர்வேஷ் சகாதேவன்
ஜூன் 09, 2025 08:20

அமித்ஷா தான் எங்களை ஜெயிக்க வைக்கப் போகிறார்.. அதிமுக, பாமகவை கபளீகரம் செய்யும் பாஜக.. திமுக பதிலடி தமிழர்களைத் திருடர்கள் என்பது போல ஒடிசா சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசி, கொச்சைப்படுத்திவிட்டு மதுரையில் கீதா உபதேசம் நடத்திக் கொண்டிருக்கிறார் அமித்ஷா என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.


Nallavan
ஜூன் 09, 2025 07:36

காசியில் இருக்கும் மணி கூட சாமியை கும்பிட்டால் நினைத்தது நிறைவேறும் என்று நினைக்கும் பொது , ஒரு நல்ல மனிதனுக்கு ஓட்டு போட்டு செய்வான் என்று நினைப்பது தவறொன்றும் இல்லை


Svs Yaadum oore
ஜூன் 09, 2025 07:36

கிருபானந்த வாரியர் ஸ்வாமிகளை கேவலமாக பேசி விட்டு இன்னிக்கு விடியல் நீலிக்கண்ணீர் வடிக்குது ...


Svs Yaadum oore
ஜூன் 09, 2025 07:29

கிருபானந்த வாரியர் ஆன்மிக பெரியவராம் ...அருமையான உபதேசங்களாம் என்று விடியல் திராவிடனுங்க ... ஆனால் அந்த மகான் வீட்டை, அண்ணாதுரை மறைவுக்குப் பின், அவரைத் தவறாகப் பேசிவிட்டார் என்று தாக்கியது யார் ??... அவர் வழிபட்ட சாமி விக்கிரகங்களை உடைத்து வாரியார் ஸ்வாமிகளை கேவலமாக பேசியது யார்?? ....இவனெல்லாம் அடுத்தவனை குறை சொல்ல தகுதி இருக்குது ??.....


சமீபத்திய செய்தி