உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுக்கடைகளை நடத்துவதில் முதல்வருக்கு எள்ளளவும் விருப்பமில்லை; அமைச்சர் சொல்றத நோட் பண்ணுங்கப்பா!

மதுக்கடைகளை நடத்துவதில் முதல்வருக்கு எள்ளளவும் விருப்பமில்லை; அமைச்சர் சொல்றத நோட் பண்ணுங்கப்பா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: 'டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு எள்ளளவும் விருப்பமில்லை. என்றாவது ஒருநாள் மூட வேண்டும் என்று தான் முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார்' என மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். தமிழகத்தில் மதுவிலக்கு வருமா என்பது குறித்து, அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம். டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு எள்ளளவும் விருப்பமில்லை. டாஸ்மாக் கடைகளை என்றாவது ஒருநாள் மூட வேண்டும் என்பது முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் என்ன ஒரு சூழல் உருவாகும் என எல்லோருக்கும் தெரியும்.

நடவடிக்கை

இங்குள்ள சூழலை பொறுத்து தான், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நிச்சயமாக ஒரு கால கட்டத்தில் மக்களை மதுவிலிருந்து வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். ஒரே நாளில் உத்தரவு போட்டு மதுக்கடைகளை மூடி விடலாம். உடனடியாக மூடினால் என்ன நடக்கும் என்பதை ஆராய்ந்து தான் நடவடிக்கை எடுக்க முடியும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது கொடுக்க கூடாது என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொள்கை ரீதியான முடிவு

விடுதலை சிறுத்தை கட்சியை பொறுத்தவரை, அவர்கள் அவர்களுடைய கொள்கை ரீதியான முடிவிற்காக மாநாடு நடத்துகிறார்கள். இது முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசை எதிர்த்து போராடுகிறார்கள் என்பது அல்ல. கல்யாணத்திற்கு அழைப்பு கொடுக்கிறார்கள்.எதிரிகளுக்கு கூட தான் அழைப்பு விடுக்கிறோம். வி.சி.க., மாநாட்டில் அதிமுக பங்கேற்கலாம் என பொதுவான அழைப்பை தான் திருமாவளவன் விடுத்துள்ளார். முதல்வர் வெளிநாட்டில் இருந்தாலும் தமிழகத்தில் நடப்பவற்றை தொடர்ந்து கவனித்து வருகிறார். இவ்வாறு முத்துசாமி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 62 )

ArGu
செப் 18, 2024 17:04

அப்போ?இன்னா


G.Kirubakaran
செப் 18, 2024 12:13

அதிக லாபத்திக்காக முதலில் ரசாயனங்களை கலந்து விதிப்பதை தடை செய்யட்டும்.


sethu
செப் 17, 2024 11:00

முத்துசாமி எம்ஜிஆர் காலத்தில் மக்களின் சேவகராக இருந்தார் இன்று .....


Ganesun Iyer
செப் 13, 2024 16:22

துண்டு சீட்டு முதல்வராக இருப்பதிலேயும் விருசிப்பமிலைத்தான், என்ன சையறது, உபிஸுங்கலோட ஆசை தட்டமுடியவில்லை.


shyamnats
செப் 13, 2024 12:22

தேர்தலுக்கு முன் இளம் விதவைகளுக்காக பொங்கிய கனிமொழி போன்ற பெரிய தி மு க தலைகள் காணாமல் போய் மாதங்கள், வருடங்கள் ஆகி விட்டன . முதல்வர் சொல்லாத ஒன்றை இவர் சொல்வதை உ பி க்கள் மட்டுமே கொண்டாடுவார்கள். பொதுமக்கள், விலை உயர்வுகளால் வாடி போய் கிடக்கிறார்கள்


Balamurugan
செப் 13, 2024 00:10

என்றாவது ஒரு நாள் சாகலாம்


theruvasagan
செப் 12, 2024 21:30

என்றாவது ஒருநாள் மூடவேண்டும் என்று நினைக்கிறாராம். ஆளுங்கட்சியாக இல்லாமல் எதிர்கட்சியாக ஆகிவிட்டால் அந்த நல்லநாள் வந்துவிடும். அது சீக்கிரம் நடக்க வேண்டும் என்பதே நல்லெண்ணம் கொண்ட மக்களின் அவா.


theruvasagan
செப் 12, 2024 21:23

மொத்தமாக மூடிவிட்டால் என்ன சூழல் உருவாகும் என்று எல்லோருக்கும் தெரியும். எதிர்கட்சியாக இருந்தபோது வீட்டுக்கு முன்னே கொடிபிடித்து மதுக்கடைகளை மூடவேண்டும் ஆர்ப்பாட்டம் செய்தபோது அம்னீசியாவில் இருந்தாங்களா. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்குக்கு முதல் கையெழுத்து என்று முழங்கியபோது தெரியவில்லையா.


பேசும் தமிழன்
செப் 13, 2024 08:01

அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று தெரிந்தும்.... ஓட்டு போட்ட மக்களை என்ன சொல்ல.... தாங்களே தங்கள் தலையில் மண்ணை அள்ளி போட்டு கொண்டு விட்டார்கள்.


இராம தாசன்
செப் 12, 2024 20:39

எள்ளளவு விருப்பம் இல்லை ஆனால் யானை அளவு ஆசை இருக்கிறது - அதனால் தான் டார்கெட் வைத்து விற்பனை செய்கிறோம். டார்கெட் எட்டவில்லை என்றால் ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம்


RAMAKRISHNAN NATESAN
செப் 12, 2024 20:11

எதெல்லாம் நம்மளை 2026 தேர்தலில் கவுத்து விடும் என்று இவர்கள் ஆலோசிக்கிறார்கள் போலிருக்கிறது ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை