உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக திட்டங்களுக்கு போதிய நிதி தரணும்: ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழக திட்டங்களுக்கு போதிய நிதி தரணும்: ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக ரயில்வே திட்டங்களுக்கு குறைந்த அளவிலான நிதியை மத்திய அரசு ஒதுக்கியிருப்பதாகக் கூறி, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே அதிகளவிலான நிதி ஒதுக்கப்பட்டதாகவும், பிற மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக மத்திய அரசை விமர்சித்து இருந்தார்.

மத்திய அமைச்சருக்கு கடிதம்

இந்த நிலையில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதியை ஒதுக்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், புதிய பாதைகளுக்கு இடைக்கால ஒதுக்கீடாக ரூ.976.1 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட்டில் வெறும் ரூ.301.3 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இரட்டை பாதை திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.285 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவானதாகும். புதிய வழித்தட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.674 கோடி குறைக்கப்பட்டுள்ளது.

மின்சார பஸ் சேவை

அதேபோல, கிளாம்பாக்கம் பஸ் நிலையம், மின்சார பஸ் சேவைகள், பெருந்திரள் துரித ரயில் போக்குவரத்துத் திட்டத்தை மாநில அரசிடம் ஒப்படைப்பது போன்ற பணிகள் எவ்வித தாமதமும் இன்றி விரைவுபடுத்த வேண்டும்.தமிழகத்தில் புதிய வழித்தடங்கள், இரட்டைவழிப் பாதை, வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

konanki
ஆக 20, 2024 10:57

வாவ் தீயசகதி கட்சி யின் பொய் பிரச்சாரத்தின் ஆணிவேரை வேரோடு பிடுங்கி எறிய முயற்சிக்கும் படித்த ஊழலற்ற ரயில்வே அமைச்சர். வாழ்த்துகள்


konanki
ஆக 20, 2024 10:53

பொய் பொய்யா சொல்லிட்டு திரியும் திருட்டு டாஸ்மாக் டுபாக்கூர் போதைப்பொருள் கடத்தல் திராவிஷ மாடல்


தமிழ்வேள்
ஆக 20, 2024 08:34

இரட்டை பாதை திட்டம் அனைத்தும் முடிவடைந்தது.. நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பின்னர் தற்போது முழு அளவில் போக்குவரத்து நடக்கிறது.. தற்போதைய நிதி ஒதுக்கீடு இறுதி நிலை மெயின்டனன்ஸ் காக மட்டுமே..இது தெரியாமல் ஒரு அறிக்கை... அதிகாரிகளுக்கும் எதுவுமே தெரியாததுதான் கேவலத்தின் உச்சம்


Barakat Ali
ஆக 19, 2024 21:46

மத்திய அரசு இனி அதிகம் உதவியளிக்க வாய்ப்பு ........ மக்களின் வரிப்பணத்தை யார் கொள்ளையடித்தால் என்ன ????


Ramesh Sargam
ஆக 19, 2024 20:13

ஆம், ஸ்டிக்கர் நிறைய தயாரித்துவிட்டோம். ஒட்டுவதற்கு மேலும் திட்டங்கள் தமிழகத்துக்கு மத்திய அரசு தரவேண்டும்.


konanki
ஆக 19, 2024 20:00

அப்ப தான் சுருட்ட முடியும்


Sivagiri
ஆக 19, 2024 19:41

திமுக வரலாற்றிலேயே - தமிழ்நாட்டு ரயில் திட்டத்துக்காக டில்லிக்கு கோரிக்கை வைப்பது இதுதான் முதல் முறை - - என்ணெமெல்லாமோ கடிதம் - அதில் இதுவும் ஒன்னு - -


ram
ஆக 19, 2024 17:52

ஏன் தி.மு.க கஜானா குறைந்து போச்சோ.. ஆமா தேர்தல் வந்ததுள்ளே.. ஆட்டையப்போட திட்டநிதி என்ற பேரில் வாங்கியாகனும்...


என்றும் இந்தியன்
ஆக 19, 2024 17:48

60% கமிஷன் எல்லா திட்டங்களுக்கும் காண்ட்ராக்டர்களிடமிருந்து கேட்பதால் மிக மோசமான கட்டுமானங்கள் நடப்பதால் உதாரணம் : கல்லணை அருகே கட்டிய மதகணை 3 நாட்களில் தண்ணீரோடு தண்ணீராக கலந்து சென்றது-10நாட்கள் முந்தைய நிகழ்ச்சி நிதி தரமுடியாது என்று மத்திய அரசு திருட்டு திராவிட மடியல் அரசிடம் சொன்னால் எப்படி இருக்கும்


sai venkatesh
ஆக 19, 2024 17:48

Adu than vidiyal arasin kodunaikal


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை