உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொல்ல சதி என பெண் ஏ.டி.ஜி.பி. அளித்த புகாரில் உண்மை இல்லை; டி.ஜி.பி. மறுப்பு

கொல்ல சதி என பெண் ஏ.டி.ஜி.பி. அளித்த புகாரில் உண்மை இல்லை; டி.ஜி.பி. மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; தம்மை கொல்ல சதி நடந்ததாக ஏ.டி.ஜி.பி., கல்பனா நாயக் கூறிய குற்றச்சாட்டுக்கு டி.ஜி.பி., அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.சென்னை எழும்பூரில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் இங்கு திடீரென தீ விபத்து நிகழ பெரும் பரபரப்பு நிலவியது. தீ விபத்தை சுட்டிக்காட்டிய ஏ.டி.ஜி.பி., கல்பனா நாயக் சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கியதில் முரண்பாடு இருப்பதாக தான் புகார் தெரிவித்ததால் தம்மை கொல்ல சதி நடந்ததாக குற்றம் சாட்டி இருந்தார். இந் நிலையில் கல்பனா நாயக்கின் குற்றச்சாட்டுக்கு டி.ஜி.பி., அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்டு உள்ள விளக்கம் வருமாறு; சம்பவம் குறித்து துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் தலைமையில் நடந்த விசாரணையில் 31 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.கல்பனா நாயக் அறையில் வேண்டும் என்றே திட்டமிட்டு தீ வைத்ததாக ஆதாரங்கள் இல்லை. அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தீ வைக்கவில்லை. தீ விபத்து நடந்த அன்றே விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்திற்கு நாசவேலை காரணமல்ல.அறையின் மின்கசிவு கசிந்தது என்பதற்கான தடயங்கள் இருந்ததாக தடயவியல் துறை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அந்த விளக்கத்தில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Tetra
பிப் 05, 2025 10:28

ஆமாம் என்றா சொல்வார்கள்.


அப்பாவி
பிப் 04, 2025 10:37

நீங்களாவது அந்த சார் யார்ன்னு சொல்லுங்க ஜிவால் சார். உங்களுக்கு தெரியார சாரா?


Kanns
பிப் 04, 2025 10:15

Laws& Rules Cannot be Biased to Vested& Power-Misusing Ruling-Parties, Stooge Officials esp Police,Judges, Bureaucrats NewsHungry-Media, VoteHungryParties, Groups like False Complant Gangs. Arrest-Defame-Prosecute Without Bails-Convict Accused PoliceDGP etc


S.V.Srinivasan
பிப் 04, 2025 08:03

நீயெல்லாம் எப்பதான் உண்மையை ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுத்திருக்க ? விடியா அரசுக்கு ஜால்ரா அடிச்சு உன் பதவியை காப்பாத்திக்க வழியைத்தான் பாக்கிற. நடத்துங்க எத்தனை நாள் ட்ராமா போடுவீங்களோ போடுங்க. தமிழ் நாட்டுல சாதாரண மனிதனுக்கு நீதி கிடைக்காது இந்த ட்ராவிஷா மாடல் ஆட்சியில். நீங்கல்லாம் பேசாம பதவியை ராஜினாமா பண்ணிட்டு திராவிட மாடல் கட்சில ஐக்கியமாயிடுங்க . 200/- ஊவாய் கிடைக்கும்.


Mani . V
பிப் 04, 2025 06:01

அப்படின்னு உங்க முதலாளி குடும்பம் சொல்லச் சொன்னதா மேடம்? வெகுவிரைவில் நீங்களும் அழுது கொண்டு பேட்டி கொடுக்க வேண்டி வரும். ஏனென்றால் உங்களுக்கு உளுத்தம் பருப்புகளின் ஸாரி உடன் பிறப்புகளின் குணம் தெரியாது.


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 03, 2025 21:58

கல்பனா நாயக் என்ற பெயரில் தமிழக ஒன்றிய காவல் துறையில் அதிகாரியே கிடையாது என்று அறிக்கை வரும் என்று எதிர்பார்த்தேன்


Suppan
பிப் 03, 2025 21:07

KJP அய்யா முட்டுக்கொடுப்பதால் வைகுண்டருக்கு இன்றைய 200 ரூபாய் கிடைக்கவேண்டும். அதைக் கெடுத்துவிடாதீர்கள்.


நசி
பிப் 03, 2025 20:46

சார் கீரீம் கலர் பிளாஸ்டிக் சேர் அப்படியே புதுசா இருக்கு. கடந்த 20 வருடங்களாக எல்லா புது பில்டிங் தீப்பிடிக்காத கேபிள் ஓயரிங் மற்றும் நவீன சேப் டிரிப் எமசிபி பொருத்தபடுகிறது ...எப்படி சார்ட் சர்க்யூட் அந்த அறையை மட்டும் பொசுக்கும்....தமிழக காவல்துறையில நிறைய சினிமா பயிற்சிகொடுக்கபடுகிறது..கேவலம்


Barakat Ali
பிப் 03, 2025 20:31

இவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பவர் பொய் சொல்கிறார் என்கிறாரா டி ஜி பி ????


Bhaskaran
பிப் 03, 2025 20:03

அறிவாலயத்தில் எழுதி கொடுத்ததை நன்றாக வாசிக்கிறார் போலிருக்கு சபாஷ்


சமீபத்திய செய்தி