உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க., கூட்டங்கள் ஒத்திவைப்பு

பா.ம.க., கூட்டங்கள் ஒத்திவைப்பு

சென்னை, : கனமழை எச்சரிக்கை காரணமாக, தி.மு.க., அரசை கண்டித்து, வடலுார், திண்டிவனம் மற்றும் சேலத்தில், இம்மாதம் நடக்க இருந்த பொதுக்கூட்டங்கள், டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக, பா.ம.க., அறிவித்து உள்ளது.அக்கட்சி தலைமையின் அறிக்கை:தி.மு.க., அரசை கண்டித்து, நாளை மறுதினம் வடலுாரிலும், 20-ல் திண்டிவனத்திலும், 26ல் சேலத்திலும் பா.ம.க., சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று கூறப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்தக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுகின்றன.டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில், இந்த பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி