உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., 400 கி.மீ.,: தி.மு.க., 781 கி.மீ.,: மழைநீர் வடிகால் கணக்கு சொல்கிறார் அமைச்சர்

அ.தி.மு.க., 400 கி.மீ.,: தி.மு.க., 781 கி.மீ.,: மழைநீர் வடிகால் கணக்கு சொல்கிறார் அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அ.தி.மு.க.,வின்10 ஆண்டு ஆட்சியில் 400 கி.மீ., தூரத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் நடந்தது. ஆனால், தி.மு.க., 3 ஆண்டு ஆட்சியில் 781 கி.மீ., தூரத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நேரு கூறினார்.அவர் கூறியதாவது;சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்துள்ளது. 20 செ.மீ., மழை பெய்தாலும் அந்த நீர் வடிந்துவிட்டது. 990 மின்மோட்டார்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. 400 டிராக்டர்கள் கொண்டு வரப்பட்டன. 40 முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கு தங்கும் மக்களுக்கு தேவையான பொருட்கள் வைக்கப்பட்டது. 4.16 லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அம்மா உணவகத்தில் இன்று 65 ஆயிரம் பேர் இலவசமாக உணவருந்தி உள்ளனர். அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணி சிறப்பாக நடந்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் மழைநீர் வடிகால் பணி 400 கி.மீ., மட்டும் நடந்தது. ஆனால் தி.மு.க., ஆட்சியில் 1135 கி.மீ., தூரம் அமைக்கப்படுகிறது. திருப்புகழ் கமிட்டி பரிந்துரை அடிப்படையில் 789 கி.மீ., டெண்டர் விடுப்பட்டு வேலை முடிந்துவிட்டது. மற்ற பகுதிகளிலும் வேலை நடக்கிறது. இதனால் தான் 4 மணிநேரத்தில் மழைநீர் வடிந்துள்ளது.மழைநீர் வடிகால் பணி தி.மு.க., ஆட்சியில் சிறப்பாக நடக்கிறது. 10 ஆண்டுகளில் 400 கி.மீ., தூரம் தான் நடந்தது. ஆனால், மூன்று ஆண்டு தி.மு.க., ஆட்சியில் 789 கி.மீ., தூரம் பணிகள் நடந்துள்ளது. இரண்டாம் கட்டமாக டெண்டர் விடப்பட்ட பணிகள் வேகமாக நடக்கிறது.மழைக்கட்டுப்பாட்டு மையம் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் ஆரம்பித்ததோடு சரி. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட சில பகுதிகளில் தண்ணீர் வடிந்துவிட்டது.ஆங்காங்கே இருக்கும் குப்பை சேகரிப்பு தடுப்பு இருப்பதால் தடுப்பு காரணமாக மழை நீர் மெதுவாக வடிகிறது. வட சென்னை, புளியந்தோப்பு உள்ளிட்ட சில பகுதிகளில் 2 அடி உயரம் தண்ணீர் நின்றது. கடந்த முறை அந்த பகுதிக்கு யாரும் செல்லவில்லை. இந்த முறை மோட்டார் வைத்த நீர் வடித்து வருகிறோம். அதற்கு மாற்று திட்டம் தயாரித்து வருகிறோம். இவ்வாறு அமைச்சர் நேரு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
அக் 17, 2024 09:43

மழைநீர் தானாக வடிந்தால் அப்புறம் எதற்கு மோட்டார் பம்பு? இப்படியே இந்த குடிகார கூட்டத்தை ஏமாற்றிக்கொண்டே நீங்கள் சொகுசாக வாழுங்கள். அதற்காகவே மக்களை சிந்திக்க விடாமல் ஆக்கி வைத்திருக்கிறீர்கள். அது புரியாமல் உங்களையே மீண்டும் மீண்டும் தேர்வு செய்யும் மக்கள் அனுபவிக்கட்டும்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 16, 2024 22:05

அதிமுக ஆட்சியில் 400 கிலோமீட்டர் திமுக ஆட்சியில் 781 கிலோமீட்டர் இன்னும் 30 சதவிகித பணி பாக்கி என்றால் 350 கிலோமீட்டர் பணி பாக்கி மொத்தம் 1531 கிலோமீட்டர். கோயமுத்தூர் - சென்னை 430 கிலோமீட்டர். அப்படி என்றால் சென்னை கோயம்புத்தூர் தூரம் விட கிட்ட தட்ட மூன்றரை மடங்கு. அவ்வளவு பெரியதா சென்னை?


Priyan Vadanad
அக் 16, 2024 21:58

இந்த புளுகுமூட்டை திருட்டாட்சி அகற்றப்பட வேண்டும். பொய்யில் கட்டப்படும் பாவக்கவும் டிம்முக்காவும் அகற்றப்பட்டாலொழிய நாடும் மாநிலமும் உருப்படாது.


Chandrasekaran Sriram
அக் 16, 2024 20:57

ஒரே பொய்யை ஆயிரம் முறை சொன்னாலும் பொய் பொய் தான்


ஆரூர் ரங்
அக் 16, 2024 20:47

பருவத்தின் துவக்கத்திலேயே வெள்ளநீர் நிற்பது வடிகால் கட்டிய லட்சணத்துக்கு சாட்சி. கால்வாய்களை சரியாகக் கட்டியிருந்தால் படகுகளும் பம்ப்களும் எதற்கு? அதிலும் சாப்பிடவா? மேலும் மேலும் டெண்டர் விட்டு கூடுதல் பேக்கேஜ் வேறு.


N Sasikumar Yadhav
அக் 16, 2024 20:18

அப்படியே இந்த திராவிட களவானிங்க ஆட்டய போட்டதையும் சொல்லுங்க மங்குனி அமிச்சரே


Narayanan Sa
அக் 16, 2024 19:57

நீட் தேர்வை எப்படி ரத்து செய்வது என்பது எங்களுக்கு தெரியும் என்று உதார் விட்டவர்கள் தான் திமுக மாடல் அரசு. சென்ற வருடமும் இப்படி தான் தம்பட்டம் அடித்தார்கள். உண்மை நிலவரம் மக்களுக்கு விரைவில் தெரியும். இப்போ வந்த மழை ட்ரைலர் தான் மெயின் பிக்சர் இனிமே தான் வரபோகிறது. திமுக பீத்தல் விரைவில் வெளிவரும்.


rama adhavan
அக் 16, 2024 19:46

நீ செஞ்சதை மட்டும் சொல்லு. முன்னவன் சரி இல்லை என்றுதானே உன்னை கொண்டு வந்தது. நீயோ ஒவ்வொன்றிலும் பழைய வெட்டி கதையை பேசிகிட்டு பொழுதை ஓட்டிக் கொண்டு இருக்கீங்க. இது 1960 இல்லை. மக்களுக்கு உண்மையை தெரிந்து கொள்ள பல வழிகள் இப்போ உண்டு. மக்களும் விழித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டனர். திராவிட பருப்பு இப்போ வேகாது.


என்றென்றும் drivida அடிமை
அக் 17, 2024 08:08

தப்புத் தப்பு ரமா அவர்களே. நாம அப்டிதான் ஏமாற்ற படுகிறது. உண்மையில் நாளை நமதே 234 லும் நமதே.


raja
அக் 16, 2024 18:58

சரி, அப்படின்னா 1200 கிலோ மீட்டருக்கு தண்ணி தேங்க கூடாதே.. அப்புறம் எப்படி ஒட்டு மொத்த சென்னையும் வெள்ளத்தில் மிதக்குது...


Raa
அக் 16, 2024 18:57

மழை நீர் : அடப் போங்கப்பா, நான் ஒரு இஞ்சு நகராமல் அங்கயேதான் இருக்கிறேன்... 100 கிமீ 400 கிமீ எனக்கு ரோடு போட்டதை பீத்திக்கிறீங்க?


முக்கிய வீடியோ