உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., கண்டனம்

அ.தி.மு.க., கண்டனம்

அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டையில், காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார், போலீஸ் நிலையத்தில் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனையில், அவர் உடலில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டிருந்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தில் காவல் மரணங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு, தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம். பொது மக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும், சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டும் நடந்து கொள்ள வேண்டும் என, காவல் துறையினருக்கு உரிய உத்தரவுகளை, முதல்வர் பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை