உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று அ.தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டம்

இன்று அ.தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டம்

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில், அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், இன்று நடக்க உள்ளது.சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில், இன்று காலை 10:00 மணிக்கு நடக்கும் கூட்டத்திற்கு, பொதுச் செயலர் பழனிசாமி தலைமை வகிக்க உள்ளார். கூட்டத்தில், மாவட்ட செயலர்கள், பிற மாநில செயலர்கள் பங்கேற்க உள்ளனர். நடிகர் விஜய், கட்சி துவக்கி உள்ள நிலையில், கட்சியினரை தக்க வைக்கவும், கட்சியை வளர்க்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. கட்சி ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடத்த தலைமை உத்தரவிட்டும், சில மாவட்ட செயலர்கள் கூட்டம் நடத்தவில்லை. அவர்களை எச்சரித்து, அனைவரும் கட்சிப் பணிகளை தீவிரப்படுத்த, பழனிசாமி உத்தரவிடுவார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

வைகுண்டேஸ்வரன்
நவ 06, 2024 10:08

அதிமுக வை இ பி எஸ் ஸை வைத்தே பாஜக சல்லி சல்லியா நொறுக்கிடுச்சு பா, பாவம். எப்பேர்ப்பட்ட கட்சியாக இருந்தது பரிதாபங்கள் உரித்தாகுக.. இரட்டை இலை யை உடலில் பச்சை குத்திக்கொண்ட தொண்டர்கள் விழிக்கிறார்கள்.


Venkateswaran Rajaram
நவ 06, 2024 09:01

முன்னாள் கொள்ளையர்கள் கூட்டம்


மோகனசுந்தரம்
நவ 06, 2024 06:44

மாவட்ட செயலாளர் கூட்டத்தைக் கூட்டி இந்த பழனி என்ன கிழிக்கப் போகிறான்


Ahamed Rafiq
நவ 06, 2024 06:27

அதிமுக 2026 தமிழக சட்டசபை தேர்தலில் படு தோல்வி அடையும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை